Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#மதிமுக - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 06 Nov 2023 10:15:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பாஜக அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது..!’’ துரை வைகோ கண்டனம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/#respond Mon, 06 Nov 2023 10:15:06 +0000 https://madrasmurasu.com/?p=7409 ’’நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு […]

The post ’’பாஜக அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது..!’’ துரை வைகோ கண்டனம் first appeared on Madras Murasu.

]]>
’’நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது.

இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள். கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது. 2016 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அவர்கள், இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவின் முற்போக்கான திட்டம் என்று பாராட்டியதோடு, உலகம் முழுமைக்கும் இத்திட்டம் ஒரு சிறந்த பாடம் என நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

அப்படிப்பட்ட தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததால் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின, பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தும் விதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, நேரடியாக பலகோடி பட்டியலின மக்களின் வாழ்வை இதன்மூலம் சிதைக்கிறது. அழிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பல தவறான கொள்கையால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி குறைப்பை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லாவிடில், ஏழை எளிய மக்களின் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்.

நிதி குறைப்பு ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் பேசியிருக்கிறார்.
ஒன்றிய பாஜக அரசு அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆளுநர்களின் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நினைப்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என பேசியிருப்பதை மறுமலர்ச்சி திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

The post ’’பாஜக அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது..!’’ துரை வைகோ கண்டனம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/feed/ 0
’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 19 Jun 2023 04:18:29 +0000 https://madrasmurasu.com/?p=4122 மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம். உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி […]

The post ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்.

உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப்பை விமர்சனம் செய்வதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாடிக்கை.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், 45 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய பெருமைக்குரியவர் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுநரை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே அவசர அவசரமாக ஒப்புதல் அளித்தார்.

இப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகின்றார். தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் போல அவர் நடந்து கொள்வதும், தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிரானது ஆகும்.

கடந்த 14.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் நீக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்திட உள்ளது.

நம் வலிமையை நாட்டுக்கு உணர்த்தவும், வெகுஜன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
கழக மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட அமைப்புகளும் ஆர்வமுடன் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வருகின்ற 20.06.2023 அன்று தென்செனையில் மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்தினை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.

கழகத் தோழர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கழக கொடியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஊடகங்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக பங்கேற்பது அவசியமானது ஆகும்.

The post ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
”அந்த அரும்பெரும் நிகழ்வை சொல்ல வைத்த திருப்பதி நாராயணன்-க்கு நன்றி..! துரை வைகோ https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25b5 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5/#respond Wed, 07 Jun 2023 10:31:32 +0000 https://madrasmurasu.com/?p=3572 மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயக்க தந்தை வைகோ அவர்கள் 1989 ஆண்டு பிப்ரவரி மாதம் ஈழத்தில் கடும் போர் நடந்து கொண்டிருந்த நிலையில், விசா வாங்கி கொண்டு விமானத்தில் செல்லவில்லை, அங்குள்ள சூழலை அறிய தன் உயிரை துச்சமென நினைத்து சிறிய மீன்பிடி படகில் குண்டு மழைகளுக்கு இடையே ஈழத்திற்கு சென்றார். அத்தகைய தீர செயலை , பாஜகவை சேர்ந்த நாராயணன் நகையாடி ஒரு பதிவிட்டுள்ளார். அவருக்கு பதிலடியாக மதுரை மண்டல […]

The post ”அந்த அரும்பெரும் நிகழ்வை சொல்ல வைத்த திருப்பதி நாராயணன்-க்கு நன்றி..! துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இயக்க தந்தை வைகோ அவர்கள் 1989 ஆண்டு பிப்ரவரி மாதம் ஈழத்தில் கடும் போர் நடந்து கொண்டிருந்த நிலையில், விசா வாங்கி கொண்டு விமானத்தில் செல்லவில்லை, அங்குள்ள சூழலை அறிய தன் உயிரை துச்சமென நினைத்து சிறிய மீன்பிடி படகில் குண்டு மழைகளுக்கு இடையே ஈழத்திற்கு சென்றார். அத்தகைய தீர செயலை , பாஜகவை சேர்ந்த நாராயணன் நகையாடி ஒரு பதிவிட்டுள்ளார்.
அவருக்கு பதிலடியாக மதுரை மண்டல இணையதள பொறுப்பாளர் சகோதரர் மானாமதுரை மருது எழுதிய பதிவு.
கள்ளதோணியில் ஈழம் சென்று தாயகம் திரும்பிய தலைவர் வைகோ நாடாளுமன்ற அவைக்கு செல்லும் பொழுது காங்கிரஸ், பாஜக என கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர். அந்த அரும்பெரும் நிகழ்வை சொல்ல வைத்த நாராயணன் அவர்களுக்கு நன்றி
இதோ அந்த நிகழ்வு:
நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு
ஈழப்பயணம் சென்று திரும்பிய தலைவர் வைகோ, 1989 மார்ச்சு 30 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.
இதே நாடாளுமன்றத்தில் கனல் கக்கும் விழிகளுடன் காங்கிரஸ் கட்சியின் மீதும், பிரதமர் மீதும் எத்தனை தடவை வைகோ கணைகளை வீசி இருப்பார். கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருப்பார். ஆனால், வைகோ யுத்த களத்திலிருந்து உயிரோடு மீண்டு, நாடாளுமன்றத்தில் நுழைந்த போது, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். அன்றைக்கு வைகோ பேச எழுந்த போது, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே மேசையைத் தட்டி பலத்த வரவேற்பு அளித்தனர்.
மாநிலங்களவைத் துணைத்தலைவர் நஜிமா ஹப்துல்லா: கோபால்சாமி எந்த ஆபத்தும் இன்றி பத்திரமாக வந்து சேர்ந்து திரும்பவும் சபைக்கு வந்ததில் அனைவரும் இன்று சந்தோஷப்படுகிறோம். இந்த சபை அவரை வரவேற்கிறது. ஏனெனில் அவருக்கு அபாயம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்றுதான் அனைவரும் கவலைப்பட்டோம்.
பாராளுமன்றத்துறை அமைச்சர் எம்.எம்.ஜேக்கப்: கோபால்சாமி திரும்பி வந்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். முழு அங்க அவயங்களோடு எந்த சேதமும் இல்லாமல் அவர் வந்ததே போதும். போய் வந்த விபரம் பற்றி அறிக்கை தரப்போகிறாரா?
ஏ.ஜி.குல்கர்னி(இ.காங்கிரஸ்): கோபால்சாமிக்கு மூளைச்சலவை (Brain Wash) செய்யப்பட்டு வந்திருக்கிறாரா என அறிய விரும்புகிறேன்.
வைகோ: எனக்கு யாரும் மூளைச்சலவை செய்ய முடியாது. தேவைப்பட்டால்
மற்றவர்களுக்கு நான் மூளைச்சலவை செய்யக்கூடியவன். (சபையில் பலத்த
சிரிப்பு) வலிவுல்லா(இ.காங்கிரஸ்): கடல் தண்ணீர் மூலம் பயணம் வந்ததால் மிக வும் சுத்தமாக வந்து இருக்கிறார்.
பன்ஜல், அனுமந்தப்பா, புதுவை நாராயணசாமி(இ.காங்கிரஸ்): எங்கள் கவலை எல்லாம் கோபால்சாமி உயிருடன் திரும்ப வேண்டும் என்பதுதான். அவர் திரும்பி வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
குருபாதசாமி (ஜனதாதளம்): கோபால்சாமி எந்த ஆபத்தும இன்றி சுகமாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கவலை தீர்ந்தது.
பி.உபேந்திரா(தெலுங்குதேசம்): இனி சபை நடவடிக்கைகளில் உற்சாகமாகப் பணியாற்றக்கூடிய கோபால்சாமியைத் தொடர்ந்து பார்க்கலாம்.
எல்.கே.அத்வானி(பி.ஜே.பி): சபையில் கோபால்சாமி இல்லாதது பெரிய குறை யாக இருந்தது. கொரில்லா தந்திரத்தோடு போய்வந்துவிட்டார்.
சுக்குமோல்சென்(மார்க்சிஸ்ட்): கோபால்சாமி மீண்டும் திரும்பி வந்ததில் நாங்கள் உற்சாகம் அடைகிறோம்.
நன்றி காணிக்கை
வைகோ : எனது நலனிலும், பாதுகாப்பிலும் அக்கறைகொண்டு, நான் சபையில் இல்லாத காலத்தில் கவலை தெரிவித்த ஆளும்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இன்று என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அவைத்தலைவர் , ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றியைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ”அந்த அரும்பெரும் நிகழ்வை சொல்ல வைத்த திருப்பதி நாராயணன்-க்கு நன்றி..! துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5/feed/ 0
“எம்.பி தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள்..!” விறுவிறு துரை வைகோ https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-40-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-40-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-40-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/#respond Sun, 04 Jun 2023 05:17:56 +0000 https://madrasmurasu.com/?p=3349 மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அறிக்கையில், “நமது இயக்கத்தின் இணையதள அணி அதிகாரபூர்வமாக தலைவர் வைகோ -வால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை 11 மண்டல பொறுப்பாளர்களும், 22 நாடாளுமன்ற பொறுப்பாளர்களும் இயக்கத் தந்தை தலைவர் வைகோ ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டு, இணையதள அணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதனுடன் இப்போது மீதமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையதள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக […]

The post “எம்.பி தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள்..!” விறுவிறு துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அறிக்கையில், “நமது இயக்கத்தின் இணையதள அணி அதிகாரபூர்வமாக தலைவர் வைகோ -வால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 11 மண்டல பொறுப்பாளர்களும், 22 நாடாளுமன்ற பொறுப்பாளர்களும் இயக்கத் தந்தை தலைவர் வைகோ ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டு, இணையதள அணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதனுடன் இப்போது மீதமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையதள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூடுதலாக 2 மண்டல பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, மொத்தமாக 13 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து செயல்பட 53 சட்டமன்றப் பொறுப்பாளர்களும் தலைவர் வைகோ  ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே தங்கள் பணிகளுக்கு இடையில் இணையதள அணியினருக்கு உறுதுணையாக இருந்து அனைத்து பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுக்க ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனி வரும் காலங்களில் எஞ்சியுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையத்தில் தலைவர் வைகோவின் கொள்கைகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியினை, இணையதள அணியினர் தொடர்ந்து செய்வார்கள். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இப்போதுதான் மதிமுக அமைப்பு தேர்தல் 5 -வது முறையாக நடந்தது. இந்நிலையில்,  திமுக கூட்டணியில் இருக்கும் அக்கட்சி இப்போதே நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கி விட்டது.

மதிமுகவின் இணையதள அணி கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விறு விறு மாற்றம், கட்சித் தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

The post “எம்.பி தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள்..!” விறுவிறு துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-40-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/feed/ 0