Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#திருவாரூர் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 21 Jun 2023 05:02:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம்..!’’ திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம் https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/#respond Tue, 20 Jun 2023 13:43:50 +0000 https://madrasmurasu.com/?p=4257 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 20.06.2023 திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை: என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். நெஞ்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கக்கூடிய நிலையில், உங்கள் முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன்.  வான்புகழ் வள்ளுவருக்குத் தலைநகரில் கோட்டம் கண்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. “ஓடி வந்த இந்திப் […]

The post ’’கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம்..!’’ திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம் first appeared on Madras Murasu.

]]>
”ஜனநாயக போர்க்களத்தில் தளபதியாக இருந்தவர் கலைஞர்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!

2018-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் நிறைவுற்றபோது நானும் என்னுடைய சகோதரி செல்வியும் இந்த இடத்தை நாங்கள் விலைக்கு வாங்கினோம். அதற்குப் பிறகு ஒரு அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் கோட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து, நான்கு ஆண்டு காலமாக அதற்காக சிரமங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு இதை கட்டி முடித்திருக்கிறார்கள்.

இதனைக் கட்டி முடிப்பதில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ஆலோசனைகள் வழங்கிய மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பார்த்துப் பார்த்துச் செதுக்கியதைப் போல, கண்ணும் கருத்துமாக இந்தக் கலைஞர் கோட்டத்தை வடிவமைப்பதை, கவனமுடன் மேற்பார்வையிட்டார் நம்முடைய வேலு அவர்கள். அவருக்கு எத்தனை பாராட்டுகள் சொன்னாலும் தகும்.

தலைவர் கலைஞர், தமிழினத் தலைவராகப் போற்றப்பட்டவர். தலைநகர் சென்னை முதல், கடல்நகர் குமரி வரைக்கும் உள்ள தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திட்டங்கள், சேவைகள், சாதனைகள், உதவிகள் செய்தவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் அவர். ஆனாலும் அவரிடம் உங்களுக்குப் பிடித்த ஊர் எது என்று கேட்டபோது, ‘நான் பிறந்த திருக்குவளை’ என்றுதான் அவர் சொல்வார்.

“உருக்குலையா மங்கையவள்
ஒளிமுகத்தை முத்தமிட
கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை”

என்று உவமைக்கவிஞர் சுரதா எழுதிய வரிதான் தனக்குப் பிடித்த வரி என்று சொல்லி பலமுறை குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு திருக்குவளையை காதலித்தவர் கலைஞர்.

தான் வாழ்ந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம் பெயரால் படிப்பகமும், தந்தை முத்துவேலர் பெயரால் நூலகமும் அமைத்தார்கள்.

பள்ளியில் மேல்படிப்பு படிக்க திருவாரூர் வந்தார் நம்முடைய தலைவர் கலைஞர். அதன்பிறகு திருவாரூரே அவர் கருவாக – திருவாகக் காரணமான ஊர் ஆகியது. கலைஞரை நாடு போற்றும் தலைவராக ஆக்கிய ஊர் இந்த திருவாரூர்.
குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என எத்தனை தொகுதிகளில் தலைவர் கலைஞர் அவர்கள் போட்டியிட்டு இருந்தாலும் இறுதியாய் வந்து நின்ற இடம் திருவாரூர். ஒரு முறையல்ல; இரண்டு முறை வென்ற இடம் இந்த திருவாரூர்.

தேர் எப்போதும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிலை கொள்ளும் என்பதைப் போல இருந்தது கலைஞரின் பயணமும். அதனால்தான் திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல, இந்த டெல்டா மாவட்டங்களுக்கே மிகச்சிறந்த – பெரிய – பிரமாண்டமானதாக திருமணம் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனைக் கட்டி எழுப்பியதைப் போலவே கவனமாக – இதனுடைய அழகு குறையாமல் பாதுகாத்து கவனிக்க வேண்டும் என்று இதன் பொறுப்பாளர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அரங்கம் அமைப்பது கூட எளிது. ஆனால் பராமரிப்பதுதான் சிரமம். சிரமம் பார்க்காமல் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“எனது கால்கள் கடைக் கோடியில் நிற்கும் மக்களைச் சுற்றியே உலா வருகின்றன. எனது கரங்கள் அவர்களைக் கரையேற்றிவிடவே நீள்கின்றன. என் கண்கள் அவர்களுக்காகவே ஒளி உமிழ்கின்றன” – என்று சொன்னார் நம்முடைய தலைவர் கலைஞர்.

நிறைவுற்ற வாழ்க்கைக்குப் பிறகும் – மருத்துவமனையாக – நூலகமாக – இது போன்ற கோட்டமாக பயனளித்துக் கொண்டு இருக்கக்கூடியவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

இன்று நான் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசை தான் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த திராவிட மாடல் ஆட்சியை நான் கலைஞருக்கு காணிக்கையாக செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

எந்த சம்பவம் நடந்தாலும் – தலைவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார் என்று யோசித்து அந்த முடிவையே நான் எடுக்கிறேன். அதனால்தான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறேன்.

‘எனது உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லிக் கொண்டாரே தவிர – இந்தியாவின் ஜனநாயகம் எப்போதெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியதோ அப்போதெல்லாம் இந்தியத் தலைவராக தனது எல்லையை விரித்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் வருவதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால், வர இயலவில்லை. எனவே, இன்று காலையில் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

ஆனாலும், அவர் இன்று நிகழ்த்துவதாக இருந்த உரையை, தமிழாக்கம் செய்து நம்முடைய திருச்சி சிவா, இங்கே வாசித்தார்கள். அந்த உரை மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வீ வந்திருக்கிறார். அவருக்கு இந்த நேரத்திலே என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகஸ்ட் 15 – விடுதலை நாள் அன்று மாநில முதலமைச்சர்கள் எல்லாம் கொடி ஏற்ற வேண்டும் என்று இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

அதேபோல் இந்திய அரசியலில் 1971 முதல் அனைத்து அரசியல் பெரு மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இந்திரா காந்தி அம்மையார் தொடங்கி அத்தனை இந்தியப் பிரதமர்களுடனும் நல்லுறவை வைத்திருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். ஆட்சி மாற்றத்துக்கும் – பிரதமர்களை உருவாக்குவதிலும் கலைஞரின் பங்கு பெரும் பங்காக இருந்துள்ளது.

சஞ்சீவி ரெட்டி முதல் பிரதீபா பாட்டீல் வரை எல்லா குடியரசுத் தலைவர்களுடனும் நட்பு வைத்திருந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரால் உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர்கள் அதிகம்.

கலைஞர் குடியிருந்த கோபாலபுரம் இல்லத்துக்கு பிரதமர்களும், அகில இந்திய அரசியல் தலைவர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் அதிகமாக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் ஆளுமையாக இருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்.

அதனால்தான் அவரது புகழைப் போற்றுவதற்காக பீகாரில் இருந்து தேஜஸ்வீ வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கியிருக்கிறது.
வருகிற 23-ஆம் தேதியன்று பீகார் மாநிலம் – பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடக்க இருக்கிறது. பாட்னா என்பது இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். பாடலிபுத்திரம் என்று வரலாற்றில் அழைக்கப்படக்கூடிய நகரம்தான் இன்றைய பாட்னா. அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாகச் சொல்லப்பட்ட நகரம் அது.

‘ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ’- என்று சொன்னார் தலைவர் கலைஞர்.

பாஜக கடந்த பத்தாண்டு காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். ஜனநாயகப் போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம் – நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். இன்னும் சொல்கிறேன். கலைஞரின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே, இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, இந்த கலைஞருடைய உடன்பிறப்புகள் இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதனைச் செய்ய முடியாது.
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும் – தமிழினத்துக்கும் – தமிழ்நாட்டுக்கும் – இந்திய நாட்டுக்கும் – இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ – செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும்.
வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத் தான் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள கூட்டம் அமையவிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் கலைஞரின் உடன்பிறப்புகளே! நாம் ஒருதாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம்.

கலைஞர் அவர்களுக்கு நான் மட்டும், மகனல்ல. நீங்கள் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள்தான். கொள்கைவாதிகள் தான், கொள்கை வாரிசுகள்தான்.
அடக்குமுறை ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுமைக்குமான அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நன்றி! வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post ’’கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம்..!’’ திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
‘’திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்…!’ ’உங்களில் ஒருவன்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2/#respond Mon, 19 Jun 2023 04:09:02 +0000 https://madrasmurasu.com/?p=4119 வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல். நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது! தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர்! எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்! ஜனநாயக அறப்போர்க்களத்தில் […]

The post ‘’திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்…!’ ’உங்களில் ஒருவன்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது!
தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர்! எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்! ஜனநாயக அறப்போர்க்களத்தில் வாளாகவும் கேடயமாகவும் இருந்து நம்மையும் நம் உயிர்மூச்சான கழகத்தையும் காத்து வருபவர் கலைஞர்!

அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஜூன் 7-ஆம் நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட வடசென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தோழமைக் கட்சித் தலைவர்கள் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உள்ளன்புடன் புகழ் வணக்கம் செலுத்தி, நாட்டைச் சீரழித்துவரும் ஜனநாயக விரோத – பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியேற்றார்கள். அதே உறுதியை அந்தக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய உங்களில் ஒருவனான நானும் ஏற்றுச் செயல்பட்டு வருகிறேன்.

‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்ற அரசியல் இலக்கணம் வகுத்துத் தந்த தலைவரல்லவா நம் முத்தமிழறிஞர் கலைஞர்! அதனால், சொல்லாக மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது கலைஞரின் நூற்றாண்டு.

சென்னை கிண்டியில் 4.89 ஏக்கர் பரப்பளவில், 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2022 மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 6 தளங்களும் 1000 படுக்கைகளும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை 2023 ஜூன் 15-ஆம் நாள் மருத்துவர்கள் – செவிலியர்களுடன் இணைந்து உங்களில் ஒருவனான நான் திறந்து வைத்தேன். தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய பிறந்தநாளை எளிய மக்களுக்காக – விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில், அவர் பெயரில் ஏழை – எளியோர் உள்ளிட்ட அனைவரும் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், குடல்-இரைப்பை உள்ளிட்டவற்றுக்கான சரியான சிகிச்சையை மேற்கொண்டு, உடல்நலன் காத்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் போலவே நீண்ட காலம் வாழ்ந்திடுவதற்கான திட்டம்தான், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. 15 மாதங்களில் இந்த மகத்தான சாதனையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது நமது ‘திராவிட மாடல்’ அரசு.
அதே நேரத்தில், மதுரையில்….. உடன்பிறப்புகளுக்கு என்ன நினைவு வரும் என்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். நான் அதைச் சொல்ல வரவில்லை. எப்போதும் ஆக்கப்பூர்வமான செயல்களையே விரும்புகிறவன் நான். வீணாக்குவதை விரும்புவதில்லை. தமிழ் வளர்த்த மாநகராம் மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக மிகப் பெரிய நூலகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் எனப் பெயரிட்டு அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய நூற்றாண்டில் மதுரையில் அவர் பெயரிலான நூலகம் விரைவில் திறக்கப்பட்டு, இளைய தலைமுறைக்கான அறிவுக் கருவூலமாக செயல்படவிருக்கிறது.

ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பன்முக ஆற்றல் கொண்ட நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் பங்கேற்புடனும் ஆலோசனைகளுடனும் நூற்றாண்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திராவிட மாடல் அரசாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அவரது அன்னையார் – எனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம்.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழர்களுக்காக மட்டுமின்றி, உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்குமான அறநெறியை – வாழ்வியலை விளக்கும் திருக்குறளை நமக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு, தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு கோட்டம் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதனைத் திருவாரூர்த் தேர் வடிவில் மிகச் சிறப்பாக அமைத்துக் காட்டியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும் அவர் பார்வைபட்டபிறகே, சிற்பி கணபதி ஸ்தபதி குழுவினரின் உளிகளால் வடிக்கப்பட்டன. வள்ளுவர் கோட்டத்தின் தேர், அதில் உள்ள வள்ளுவர் சிலை, குறள் மணிமண்டபம், பிரமாண்ட கலையரங்கம், படிக்கட்டுகள், முகப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அமைத்தவர் தலைவர் கலைஞர். முழுமையடைந்த வள்ளுவர் கோட்டத்தைத் திறப்பதற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில், கழக ஆட்சி முழுமையடையாதபடி எமர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது.

உங்களில் ஒருவனான நானும் என்னைப் போன்ற கழக உடன்பிறப்புகள் பலரும் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறைவாசத்தையும் சித்ரவதைகளையும் அனுபவித்த காலம் அது. 1976 ஏப்ரல் 15 அன்று வள்ளுவர் கோட்டத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது திறந்து வைத்தார். வள்ளுவர் கோட்டத்தைத் தன் சிந்தனைக் கருவில் சுமந்து, வளர்த்து, செயல்திட்டமாக ஈன்றளித்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்குத் திறப்பு விழாவிற்கான முறையான அழைப்பு இல்லை. அவருக்கு அதில் பங்கேற்கும் வாய்ப்பும் இல்லை. ஆனால், அவர் எண்ணமெல்லாம் வள்ளுவர் மீதும் வள்ளுவர் கோட்டத்தின் மீதும்தான் இருந்தன. அந்தக் கோட்டத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உட்கார்ந்து, ‘கோட்டம் திறக்கப்படுகிறது – குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்று தன் ஆருயிர் உடன்பிறப்புகளுக்கு நீண்ட கடிதம் எழுதினார் தலைவர் கலைஞர். முரசொலியில் பொடிப்பொடி எழுத்துகளால் ஏறத்தாழ மூன்று பக்க அளவிற்கு வெளியான உணர்ச்சிமிகுந்த கடிதம் அது.

“கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும், வள்ளுவர் சிலை இருக்குமிடும் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான ‘கோணல் மாணல்’ கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன்” என்று வள்ளுவர் கோட்டத்தின் வரைபடம் எப்படி உருவானது என்பதை அதில் விளக்கியிருப்பார் கலைஞர்.
1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் நாள் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய விழாவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரும், அன்றைய பொதுச்செயலாளர் நாவலரும், பொருளாளர் இனமானப் பேராசிரியரும், தமிழறிஞர்கள் பலரும் ஆற்றிய அருந்தமிழ் உரைகளைத் தன் கடிதத்தில் எடுத்துக்காட்டும்போது, “அடடா! கரும்புத் தூண் நட்டு, கற்கண்டுக் கூரை வேய்ந்து, கனிச்சாறு கொண்டு தரைமெழுகி, சர்க்கரையால் கோலமிட்டிருந்தது போல இருந்தது அந்த விழா!” என்று குறிப்பிடுகிறார்.

அடிக்கல் நாட்டும் விழா இத்தனை இனிப்பாக – இனிமையானதாக இருந்த நிலையில், தனக்கு அழைப்பே இல்லாத வள்ளுவர் கோட்டத்தின் திறப்புவிழா நாளில் தன் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் முத்தமிழறிஞர் கலைஞர் தன் உடன்பிறப்புகளுக்கு விளக்கியிருக்கிறார்.

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல. எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறக்க முடியாத இடம். அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன். உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேறுகால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பிப் பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான் நான் பெறுகிறேன் இன்று” – என்று அந்தக் கடிதத்தில் தன் உள்ளத்து உணர்வுகளை உணர்ச்சிப்பூர்வமாக உடன்பிறப்புகளிடம் பகிர்ந்திருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். ஒரு தாயின் மனநிலையில் இருந்த தலைவரின் தவிப்பினைக் கழக உடன்பிறப்புகள் முழுமையாக உணர்ந்த காரணத்தினால்தான், 13 ஆண்டுகாலம் பலவித நெருக்கடிகளுக்கிடையே தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தைக் கட்டிக்காத்த போது, அவருக்கு உற்ற துணையாக இருந்த உடன்பிறப்புகளின் உழைப்பினால் 1989-ஆம் ஆண்டு தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது அதே வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்பு விழாவை நடத்தி, முதலமைச்சராக உறுதிமொழியேற்று, தன் சபதத்தை நிறைவேற்றினார் தலைவர் கலைஞர்.

அவரது நெஞ்சமெல்லாம் நிறைந்த வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் நம் தலைவர் கலைஞர். அந்தத் திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை – என் தாத்தா முத்துவேலரின் பெயரிலான நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. எதிலும் வல்லவர் என்று நான் பாராட்டிய மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இந்தப் பணிக்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் திரு.பூண்டி கலைவாணன் விழா ஏற்பாடுகளை அருமையான வகையில் கவனித்து வருகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடுத்ததாகத் திருவாரூரில் கோட்டம் திறப்பு விழா என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையிலே, கோவையிலும் கலைஞரின் புகழ் போற்றி, கழகத்தின் வலிமையைக் காட்டும் வகையிலே தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணும் வகையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியிருக்கிறது. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை உடன்பிறப்புகளாகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் – மாநில உரிமைகளை மீட்கவும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் துணிந்து நடைபோடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டனக் கூட்டம் விடுத்துள்ள செய்தி.

குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் கழக உடன்பிறப்புகளை, ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன். தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்புரையாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அவரது திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்.

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன்.பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்!

The post ‘’திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்…!’ ’உங்களில் ஒருவன்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2/feed/ 0
”சிங்கப்பூர் வாழ் சகோதரர்கள் பெருகவாழ்வார்கள்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0/#respond Mon, 12 Jun 2023 03:45:42 +0000 https://madrasmurasu.com/?p=3714 திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்களான அன்பழகன், தனசேகரி ஆகியோரின் மகன்கள் பொறியாளர்கள் இளங்கோவன்(64), முத்தழகன்(59), ஆடிட்டர் ராஜகோபால்(55) ஆகியோர் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டித் தந்துள்ளனர். இவர்கள் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள். தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் நம்ம […]

The post ”சிங்கப்பூர் வாழ் சகோதரர்கள் பெருகவாழ்வார்கள்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து first appeared on Madras Murasu.

]]>
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்களான அன்பழகன், தனசேகரி ஆகியோரின் மகன்கள் பொறியாளர்கள் இளங்கோவன்(64), முத்தழகன்(59), ஆடிட்டர் ராஜகோபால்(55) ஆகியோர் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டித் தந்துள்ளனர். இவர்கள் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள்.

தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம்’ என்ற திட்டம் மூலம் தங்கள் பயின்ற பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தங்களது தாயாரின் பெயரில் ரூ.1 கோடி மதிப்பில் 3 அடுக்குகள் கொண்ட 9 வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளனர்.

கடந்த 2018-ல் தங்கள் சொந்த ஊருக்கு வந்தபோது கஜா புயலில் பள்ளி மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால் அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மூவரும் இணைந்து பணம் சேர்த்து, இதை செய்திருப்பதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.

தங்களது தாயாரின் பெயரில் ‘தனசேகரி அம்மாள் அறிவரங்கம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள கட்டிடத்தை தனது தந்தை அன்பழகன் கரங்களால் திறக்கச் செய்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலையில் சகோதரர்களான அ.இளங்கோவன், அ.முத்தழகன், அ. ராஜகோபால் ஆகியோர் இணைந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தியிடம் ஒப்படைப்பு செய்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்எல்ஏ மாரிமுத்து, பி.டி.ஏ.தலைவர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் இ.மாதவன், ஊராட்சி தலைவர் ஆர்.பி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சகோதரர்களின் இந்த போற்றுதலுக்குரிய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முதலமைசர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ”திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், கஜா புயலினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, அந்தக் கிராமத்தில் வசித்த தாய் தனசேகரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, சிங்கப்பூர் வாழ் சகோதரர்களான இளங்கோவன், முத்தழகன், இராஜகோபால் ஆகியோர் நம்ம பள்ளி திட்டத்தின்படி செப்பனிட்ட செய்தியறிந்து முதல்வராக மட்டுமல்ல, திருவாரூர்க்காரனாகவும் உள்ளம் நெகிழ்ந்து போனேன்.

பள்ளியைச் செப்பனிட்டதோடு, தனசேகரி அம்மாள் அறிவரங்கம் என மறைந்த தங்களது தாயின் பெயரை அரசின் அனுமதியோடு அப்பள்ளிக் கட்டடத்திற்குச் சூட்டிய அந்தச் சகோதரர்கள், அந்த ஊரின் பெயர்போல் பெருகவாழ்வார்கள்” என்று கூறியுள்ளார்.

The post ”சிங்கப்பூர் வாழ் சகோதரர்கள் பெருகவாழ்வார்கள்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0/feed/ 0