acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’பா.ஜ.க. செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியின் முழு விபரம் first appeared on Madras Murasu.
]]>அரசியல் சட்டத்தின்கீழ் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் இல்லையென்று தெரிந்திருந்தும், ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதைக் கிடப்பில் போடுவதாக உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அவருடைய நோக்கம் என்ன என்று கருதுகிறீர்கள்?
எனது தலைமையிலான தி.மு.க. அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கம். இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து – இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் ஆளுநரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது. அதனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசுக்கு எதிராக “விதண்டாவாதம்” பேசி வருகிறார்.
ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்..
புதிய ஒப்பந்தங்களைப் போடுவதற்காகவும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றேன். அந்த நேரம் பார்த்து, ‘நேரில் அழைப்பு விடுப்பதால் முதலீடுகள் வராது’ என்று இவர் பேசுகிறார். இதன் மூலமாக அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களிடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் கிடைத்துவிடக் கூடாது என நினைக்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி விடக் கூடாது என நினைக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அவரது இந்த பேச்சுகள்.
நாள்தோறும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவது, நல்லாட்சி இங்கு நடப்பதைப் பார்த்து அவர் எரிச்சல் அடைவதைக் காட்டுகின்றன. அவரது ஆதாரமற்ற – அரசியல் சட்டத்தை மீறிய பேச்சுகள் நடவடிக்கைகள் சமூக சலசலப்பை ஏற்படுத்துவதாக – சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாக அமைந்துள்ளன. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல்சட்டப்படி தான் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழ்நாட்டு மக்களுடன் – தமிழ்நாட்டின் நலனுடன் தனது விபரீத விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்!
ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்படுகிறார் என்பதே பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அவருடைய இரண்டாவது கடிதத்தைப் பார்க்கும் போது, உள்துறை அமைச்சகத்தையோ, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரலையோ) கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒன்றிய அமைச்சகம் சொல்லிச் செய்கிறாரா, இல்லையா என்பதற்குள் நான் போகவிரும்பவில்லை. அவராகச் செய்தாலும், ஒன்றிய அரசு சொல்லிச் செய்தாலும், ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் – நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம்! அவரை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த போது அதை அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தீர்கள். ஆனால் நீங்களே ஒருகாலத்தில் வழக்குகளில் சிக்கிய அ.தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது ஒரு முரண்பாடான நிலைபாடு என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
இத்தகைய கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் ஆளுநர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அவர் அரசியல் சட்டபடிதானே நடக்க வேண்டும். அப்படி அவர் நடக்காததுதான் எங்களது சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை பா.ஜ.க. குறிவைப்பதைப் போலவே ஆளுநரும் செயல்படுகிறார். அதனைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
செந்தில் பாலாஜியின் கைதே சட்டவிரோதமானது என்று அவரது மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அ.தி.மு.க. அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை; ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில்பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது. அமலாக்கத்துறை மனிதநேயமின்றி கைது செய்கிறது. நேர்மையாக செயல்பட வேண்டிய அந்த அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.
9 ஆண்டுக்கு முந்தைய ஒரு புகாருக்காக – திடீரென்று ரெய்டு நடத்தி – 18 மணி நேரம் அடைத்து வைத்து – சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர் அமைச்சராக இருப்பவர். பகிரங்கமாக வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தவர் தானே. அப்படி இருக்கும் போது அடைத்து வைத்து ஒரே நாளில் வாக்குமூலம் வாங்க வேண்டிய அவரசம் எங்கே வந்தது?
இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கிறது, அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது “நாடகம்” என இதயத்தில் ஈரமில்லாமல் வாதிடுகிறது அமலாக்கத்துறை. முதலில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துமனை மருத்துவர்கள் கூறியதை நம்ப மறுத்தது. பிறகு தனியார் மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, அமலாக்கத்துறையின் இந்த மனித நேயமற்ற செயலையும், “செலக்ட்டிவ்” கைதையும்தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எதிர்க்கிறோம்.
எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு.
மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். அவ்வளவுதான்! மற்றபடி நேர்மையான- சட்டத்திற்குட்பட்ட விசாரணையை நாங்கள் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. சட்டப்படியே சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம்.
அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததுமே நீங்களே முன்வந்து தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறதே?
நாடு முழுவதும் குற்ற வழக்குகள் – ஒன்றல்ல, பல இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் – எம்.பி.க்கள் மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதலமைச்சராக பதவியில் நீடித்தவர்தான் அம்மையார் ஜெயலலிதா. பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையிலேயே எத்தனை பேர் மீது குற்றவழக்குகள் இருக்கிறது என்பது தேர்தல் அபிடவிட்டை பார்த்தாலே தெரியும். ஆகவே “தார்மீக அடிப்படை” என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தும் கிளை அமைப்பாக அமலாக்கத்துறை மாற்றப்பட்ட பிறகு – நான் எடுத்துள்ள நிலைப்பாடே சரியானது ஆகும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது அரசியல் எதிரிகளை பழி வாங்க, அமலாக்கத்துறையை பா.ஜ.க. பாய்ச்சிய சம்பவங்களை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடு சரியானது என நீங்களே சொல்வீர்கள்.
இப்படி நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், பா.ஜ.க.வில் சேர்ந்த பிறகு அவர்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடே சரியானது என நீங்களே சொல்வீர்கள்!
இது செந்தில்பாலாஜி என்ற ஒரு தனிப்பட்ட அமைச்சர் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. இது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உரிமைகள் குறித்த பிரச்சினை ஆகும். இது எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டது ஆகும்.
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக நீங்கள் செந்தில்பாலாஜியைக் கண்டித்தீர்களா?
அது தவறான செயல் தான். அதனை நான் கண்டித்தேன். அந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக அனைவரையும் காவல்துறை கலைத்தது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்துள்ளது இந்த அரசு. அதை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக பயன்படுத்தப்படும் வருமான வரித்துறையும் மறைக்கிறது. பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் மறைக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலான நிலைமைக்குச் சென்று விட்டது. இத்தகையச் சூழலில் ஆளுநருடன் இணைந்து செயல்படுவது சாத்தியமா? கூட்டணிக் கட்சிகள் எல்லோமே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீங்களும் அதை வலியுறுத்துவீர்களா?
ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்.
ஒன்றியத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக சற்றும் தளர்வில்லாத நிலைபாட்டை எடுத்துப் பேசி வருகிறீர்கள். கட்சிகளை அணி திரட்டுகிறீர்கள். அதற்காகத்தான் உங்கள் அரசையும் அமைச்சர்களையும் ஒன்றிய அரசு குறி வைக்கிறதா?
ஆமாம்! அதுதான் உண்மை. அகில இந்திய ரீதியில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை கட்டுவதில் தி.மு.க. முனைப்பாக இருக்கிறது. அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை வந்து சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். பா.ஜ.க. – காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று என்னிடம் சிலர் சொன்ன ஆலோசனையை நான் முழுமையாக நிராகரித்து விட்டேன். காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்றும் சொல்லி விட்டேன். இவை ரகசியத் தகவல்கள் அல்ல, பொதுமேடைகளில் இதனைச் சொல்லி விட்டேன்.
இப்போது பாட்னாவில் நடந்த கூட்டத்திலும் தேர்தல் அணிகளை எப்படி அமைப்பது என்பதை நான் விளக்கிச் சொல்லி இருக்கிறேன். மாநில அளவில் பெரிய கட்சி தலைமையில் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு, அல்லது பொதுவேட்பாளர் என மூன்று விதமாக தேர்தலை சந்தித்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன். இதைத்தான் நான் ஆலோசனையாகச் சொன்னேன் என்பதையும் நிருபர்கள் கூட்டத்தில் விளக்கி இருக்கிறேன். இவை அனைத்தும் பா.ஜ.க.வை எந்தளவுக்கு கோபப்படுத்தி இருக்கிறது – அவர்களுக்கு “பாட்னா பயம்” எப்படி வந்திருக்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தில் போய் பிரதமர் மோடி அவர்கள் தி.மு.க.வையும் தலைவர் கலைஞரையும் பழித்துப் பேசியதைப் படித்தால் உணரலாம். இதனால்தான் தி.மு.க. அமைச்சர்களை குறி வைக்கிறார்கள்.
தி.மு.க. அமைச்சர்களைக் குறி வைப்பதால், நாங்கள் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பா.ஜ.க.வின் வன்மத் தாக்குதலுக்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாடுகளில் வேகம் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கெடுக்க பா.ஜ.க. எந்தவிதமான சூழ்ச்சிகளிலும் ஈடுபடும். அதன் ஒருபகுதியைத்தான் மகாராஷ்டிராவிலும் இப்போது பார்க்கிறோம். பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை எல்லாம் மக்கள் மவுனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களின் மவுனத்தை தங்கள் மீதான பயம் என நினைத்த பாசிசவாதிகள் அனைவரும் வீழ்ந்ததுதான் வரலாறு. ஜனநாயகத்திற்கு, வாக்களிக்கும் மக்கள்தான் பாதுகாப்பு கவசம். அதுவே பலம்! எனவே, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க பா.ஜ.க. செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது. மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் கூட்டணி அமைப்பதையும் – வெற்றி பெறுவதையும் – இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படப் போவதையும் இனி பா.ஜ.க.வால் தடுக்க முடியாது.
அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்துகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு தலைவரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகளால் இதுவரை முடியவில்லை. அத்துடன் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இன்னும் உருவாகாத நிலையில், அக்கட்சியை அடுத்தத் தேர்தலில் வீழ்த்த முடியுமா?
அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சியே, இன்னும் நரேந்திர மோடியை முன்னிறுத்தவில்லை. அவரைத் தான் முன்னிறுத்துவார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்கிறீர்கள். இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்!
பொதுவாக கூட்டணிக்கு தலைவர் இருப்பதை விட, இலக்கு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கொள்கை, அரசியல் சட்டம் என அனைத்திற்கும் எதிராகச் செயல்படும் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்துவோம் என்ற கருத்தியலே எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
The post ’’பா.ஜ.க. செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியின் முழு விபரம் first appeared on Madras Murasu.
]]>The post ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் first appeared on Madras Murasu.
]]>திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு 1.7.2023 அன்று பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு:
குற்றாலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், 44 ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், இருபால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
‘திராவிட மாடல்’ ஆட்சி, பகுத்தறிவு, சமூகநீதி இவற்றையெல்லாம் மய்யப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பயிற்சி முகாம் ஓர் அரிய வாய்ப்பு. ஏராளமான மாணவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 44 ஆம் ஆண்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்; இங்கே வரும்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு பிறகு திரும்பப் பெற்றது குறித்து தங்கள் கருத்து என்ன?
கி.வீரமணி: ஏற்கெனவே நான் என்னுடைய அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இதுவரை எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட் டிற்கு வந்திருந்தாலும்கூட, – ‘திராவிட மாடல்’ ஆட்சி இங்கே சிறப்பாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அனுப்பப்பட்டவராக இருக்கிறார் இந்த ஆளுநர்.
ஏனென்றால், அவர் வந்த நாள் முதல் இந்த நாள் வரை முழுக்க முழுக்க ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்துகிறார். அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக – அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகவே நடந்துகொள்கிறார். அரசமைப்புச் சட்டத்தில், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதைப்பற்றிக்கூட புரிந்து கொள்ளாமல், ஆளுநர் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இஷ்டப்படி நடந்துகொள்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் – அவர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உடனுக்குடன் பரிசீலித்து அனுப்பவேண்டும் என்று மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப்போல இங்கு நடக்காமல், திட்டமிட்டே இவர் வேண்டுமென்றே 13 மசோதாக்களை கையிலே வைத்திருப்பது மட்டுமல்ல – அண்மையில் நடைபெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு – மற்றவை எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
வழக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது – அவருடைய ரிமாண்டை நீட்டித்திருக்கிறார்கள்; மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது – அதனை அனுமதித்திருக்கிறது உயர்நீதிமன்றம். இந்தச் சூழ்நிலையில், ஒருவர்மீது வழக்குப் போடுவதினாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. தீர்ப்பு வரவேண்டும்; அந்தத் தீர்ப்பில் இரண்டாண்டுகளுக்குமேல் தண்டனை கொடுத்தால் தான், ஒருவரின் பதவியைப் பறிக்க முடியும். மற்ற மாநிலங்களில் இதுபோன்று நடந்திருக்கிறது. ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சினையில் அப்படியில்லை.
யாரை அமைச்சராகப் போடுவது என்பது முதல மைச்சருடைய தனி உரிமை; ஆங்கிலத்தில் அதற்கு இருக்கின்ற சொல் Prerogative – ”It is a Prerogative of the Chief Minister of any State. To whom he should appoint Minister and advice of the Chief Minister” என்ற வார்த்தைதான் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.
முதலமைச்சருடைய அறிவுரைப்படி, அவர் யாரைப் பரிந்துரை செய்கிறாரோ, அதில் கையெழுத்துப் போடவேண்டியதுதான் ஒரு ஆளுநருடைய வேலை. அரசமைப்புச் சட்டத்தின் 163 ஆவது பிரிவில் மிகத் தெளிவாக இருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்திருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர்களை நியமிப்பது என்பது காலங்காலமாக இருந்திருக்கிறது. ஏன்? கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜ கோபாலாச்சாரியார், இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார்.
இலாகா இல்லாத அமைச்சர் என்று சொன்னால், அவருக்கு வேலை இல்லை என்று அர்த்தம் இல்லை. எந்த இலாகாவில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்வதற்குப் பரிபூரண சுதந்திரம் அவருக்கு உண்டு. அப்படி இருக்கக்கூடிய சூழலில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மாற்றுவதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது. அதுகுறித்து நான் எழுதிய அறிக்கையில், அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் நீங்கள் சொல்கிறீர்கள்? என்று கேட்டிருந்தேன்.
ஆளுநரின் அறிவிப்பைக் கண்டித்து, நீதிமன்றத் திற்குப் போய் நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் என்று முதலமைச்சர் சொல்லிவிட்டார். மக்கள் மன்றம் கொதித்தெழுந்துவிட்டது; அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குப் போனால் என்னாகும்? ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் இந்த ஆளுநர் கண்டிக்கப்பட்டு இருக்கிறார், பேரறிவாளன் வழக்கில்.
”உங்களுடைய எல்லையைத் தாண்டி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்; உங்கள் அதிகார எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள்” என்று தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே, ஆளுநருடைய நிலைப்பாடு, அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.
அதைவிட வேடிக்கை என்னவென்றால், தமிழ் நாட்டுத் தலைவர்கள் – ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அத்துணைத் தலைவர்களும் ஆளுநரைக் கண்டித்து அறிக்கைகளைக் கொடுத்தவுடன், ஆளுநர் உணர்ந்தாரோ என்னவோ – அதனுடைய ஆபத்தை உள்துறை அமைச்சர் தெரிந்து கொண்டிருக்கின்றார்.
உச்சநீதிமன்றத்திற்கு வழக்குப் போனால், அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டதினால், நான்கு மணிநேரத்தில் தமிழ் நாட்டு ஆளுநரின் அறிவிப்புத் திரும்பப் பெறப்பட்டது.
இதுபோன்று முன்யோசனையற்ற, தெளிவற்ற நிலையில் அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர், இப்பொழுது என்ன சொல்கிறார், இந்திய அரசு வழக்குரைஞருடன் ஆலோசனை செய்யவிருக்கிறேன் என்கிறார்.
சட்ட ஆலோசனை கேட்ட பிறகு, செய்வதுதான் மிகவும் முக்கியம். ”வண்டிக்கு முன்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதா?” ”ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு!”
தமிழ்நாட்டு ஆளுநர் எல்லாவற்றிலும் ஆத்திரமாக இருக்கிறார்; வள்ளலாரை சனாதனி என்று சொல்கிறார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். ஆரிய – திராவிடத்திற்கு விளக்கம் சொல்கிறார். இவர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் – போட்டி அரசு நடத்தவேண்டும்? என்று துடிக்கிறார்.
ஆகவே, தமிழ்நாடு முழுக்க வைக்கவேண்டிய கோரிக்கை தமிழ்நாடு ஆளுநர் உடனே ராஜினாமா செய்யவேண்டும்; அவருக்கு ஜனநாயக உணர்வு இருந்தால், ராஜினாமா செய்வார், நான் தவறு செய்து விட்டேன் என்று. அப்படி அவர் செய்வதற்குத் தயாராக இல்லை யென்றால், அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
”ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்” என்கிற கோரிக்கை – தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும் – அதற்கான இயக்கத்தை கட்டுவோம். இதுதான் இப்பொழுது மிகவும் முக்கியம்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
The post ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’அமைச்ச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தது சரியா..! தவறா..?’’ தி இந்து நாளேடு தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>கடிதம் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தான் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் பதிலுக்கு இந்திய அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்கவிருப்பதாகவும் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அரசியல் சாசன விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தனது அதிரடியான நடவடிக்கைக்கு முன்பு உரிய சட்ட ஆலோசனையை அவர் பெற்றிருப்பார் என்றுதான் ஒருவர் நினைக்கக் கூடும்.
ஆனால் கடந்த கால நிகழ்வுக்கு பொருந்தக் கூடிய சட்ட ஆலோசனை பெற திரு. ரவி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார் என்பது அவரது மோசமான முடிவெடுக்கும் திறனையே காட்டுகிறது. மாநிலத்தின் நிறைவேற்று அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் அவர் செயல்படுவது மற்றும் முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 153, 163 மற்றும் 164 வது பிரிவுகளை பயன்படுத்தியிருப்பதாக அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், ஆளுநருக்கு இதில் எந்த விருப்புரிமையும் இல்லை என்பதையே அரசியல் சாசன செயல்திட்டம் இந்த பிரிவுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறது.
அமைச்சருக்கு எதிரான குற்றசாட்டுகள் மற்றும் சமீபத்திய உத்தரவில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது அசாதாரணமான நடவடிக்கையை நியாயப்படுத்த திரு. ரவி முனைந்திருக்கிறார். ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவதற்கான கோரிக்கை தார்மீக உணர்வுக்கான வேண்டுகோள்தானே தவிர சட்டரீதியான தேவை இல்லை. ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற தனது முந்தைய ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிற காரணத்தால் தன்னிச்சையாக ஆளுநர் ஒருவரை நீக்குவதென்பது அரசியல் சாசன கெடுநிகழ்வன்றி வேறு எதுவும் இல்லை. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் தாமே விலகுவது அல்லது முதலமைச்சர்களால் நீக்கப்படுவதே விரும்பத்தக்கதாக இருக்கும்.
கடந்த காலங்களில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது தார்மீக அடிப்படையிலானதே தவிர அரசியல் சாசனத்தின் கட்டாய அம்சம் இல்லை. முந்தைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர் பங்கு வகித்த காலகட்டத்தில் திரு. செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகார்களும், அதில் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுகளும், அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை பதவி விலகும் அளவுக்கு தீவிரமானவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அமைச்சர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக “பதவி என்கிற கேடயத்தை” முதலமைச்சர் வழங்குகிறார் அல்லது அமைச்சரவையில் அமைச்சர் தொடர்வது உரிய சட்ட நடைமுறைக்கு இடையூறாக இருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க திரு. ஸ்டாலின் தாமாகவே முன் வந்து செயல்பட்டிருக்கலாம். ஆனால், ஆளுநரின் தவறான செயலை எதுவும் நியாயப்படுத்த முடியாது.
The post ’’அமைச்ச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தது சரியா..! தவறா..?’’ தி இந்து நாளேடு தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு first appeared on Madras Murasu.
]]>இதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 அன்று அறுவைச் சிகிச்சை செய்வதென காவேரி மருத்துவ மனை திட்டமிட்டுள்ளது. இதற்கு அனு மதி அளித்துள்ள சென்னை உயர் நீதி மன்றம், சிகிச்சைக்கு இடையூறு இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில், மருத்துவ மனை வளாகத்திற்கு உள்ளேயே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
ஆனால், செந்தில் பாலாஜியை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவும் வலியுறுத்தி, அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு, மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, இம்மனுவை உட னடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
“சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. அவர் ஓர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி யிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது.
மேலும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் மருத்துவ மனைக்கு வெளியே அழைத்து செல் லாமல் அங்கேயே வைத்து விசா ரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்றா கும். எனவே, செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு இன்றே விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத்துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.
The post ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு first appeared on Madras Murasu.
]]>The post ”நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க., இதிலும் வெற்றி பெறும்..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.
]]>2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வுக்கு மிகக் கடினமானதொரு நிலை என்று பா.ஜ.க. அரசு வட்டாரமும் – அதிகார மய்யங்களும் உணர்ந்திருப்பதால் அதன் தோல்வி பயத்தின்காரணமாகவே, வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆட்சி – அமைச்சர்களைத் தம்மிடம் உள்ள ‘திரிசூல’மான சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை முழு வீச்சில் பயன்படுத்தி, தி.மு.க. போன்ற கட்சிகளை அச்சுறுத்தும் வகையினைக் கையாளத் துவங்கியுள்ளதற்கு எடுத்துக்காட்டுதான் – தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சோதனைகள் ஆகும். அதன் மூலம் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மன உளைச்சல் – உடல் நலப் பாதிப்பு ஆகியவை அப்பட்டமான மனித உரிமைகள் பாதிப்பும் ஆகும்.
முன்பு, 2011-2016இல் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அவர்மீது தனி நபர்களால் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் விசாரணை, சோதனைகள் என்று இப்போது நடத்த முன் வந்துள்ளது பா.ஜ.க. அரசு.
அவரும் தொடக்கத்திலிருந்தே அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகக் கூறி, சொன்னபடி ஒத்துழைப்பையும் கொடுத்து வந்த நிலையில், தலைமைச் செயலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபடுவதை – தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் உத்தியாகவே கருத வேண்டியுள்ளது!
தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்தாலும், அவற்றை சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும், வலிமையும் அதற்கு உண்டு; பல நெருக்கடிகள், அவதூறுகள், வழக்குகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற வரலாறும் அதற்கு உண்டு!
சட்டப் போராட்டங்களானாலும், மக்கள் போராட்டமானாலும் இரண்டிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று சோதனைகளிலிருந்து மீண்ட வரலாறும் வலிமையும் தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு! இப்போதும் உண்டு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை மிகவும் சீர்கேடாகுமளவுக்கு, இப்படி நடப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மனித உரிமைப் பறிப்பும்கூட.
மக்களுக்கு எந்த ஆட்சி எப்படிப்பட்டது என்பது தெளிவாகப் புரியும். அவர்கள் பொறுமைக்குப் பதில் கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க வேண்டிய முறையில் கிட்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய விரும்புகிறோம்.
இத்தகைய நெருப்பாற்றில், நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இந்தப் போராட்டத்திலும் புடம் போட்ட தங்கமாக வெளிவரும்.
ஜனநாயகத்தின் நிரந்தரக் காவலராகத் தன் கடமையைத் தவறாது ஆற்றும்!
The post ”நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க., இதிலும் வெற்றி பெறும்..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.
]]>The post ’’இப்போது செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி – அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்.
தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள்.
அது தான் இங்கும் நடக்கிறது. விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது.
என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்கு முறைகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
The post ’’இப்போது செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>