Madras Murasu

அரசுப் பள்ளி மாணவனா? வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம்..! உடனே விண்ணப்பிக்கலாம்

திட்டம் என்ன?

தமிழ்நாடு அரசு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் “அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயில நிதியுதவி வழங்கும் திட்டம்” (தமிழ்நாடு மாணவர்களுக்கு மட்டும்).

2026-2027 கல்வியாண்டுக்கு விண்ணப்பம் ஆரம்பம்!

முக்கிய தேதிகள்:
– விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 2.11.2026
– விண்ணப்பப் பதிவு நிறைவடையும் நாள்: 31.12.2026
– அச்சுப் பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.12.2026

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
முழு விவரம்: dte.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்? – 5 தகுதிகள்:

1. அரசுப் பள்ளி தகுதி:
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அல்லது 6 முதல் 10 வரை அரசுப் பள்ளியில் படித்து, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

2. வெளிநாட்டு பல்கலை தகுதி:
QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் (QS World University Rankings) முதல் 500 இடங்களில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில், பொறியியல் / கலை / அறிவியல் / மனிதவியல் துறையில் முழுநேர வளாக (Full-time, On-campus) முதுநிலைப் பட்டப்படிப்புக்கு (Master’s Programme) நிபந்தனையற்ற (Unconditional) சேர்க்கை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

3. மதிப்பெண் தகுதி:
இளங்கலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரநிலையைப் பெற்றிருக்க வேண்டும்.

4. வருமான தகுதி:
குடும்பத்தின் ஆண்டு வருமானம் அனைத்து மூலங்களிலிருந்தும் ரூ.8.00 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

5. வயது தகுதி:
01.08.2026 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எத்தனை பேருக்கு? எவ்வளவு பணம்?
– மொத்தம் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
– 25 பேர் – பொறியியல் பிரிவு
– 25 பேர் – கலை, அறிவியல் மற்றும் மனிதவியல் பிரிவு
– தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, திட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.36.00 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

தொடர்பு முகவரி:
இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 53, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை – 600025.
(“Application for PG Abroad” என உறையின் மீது குறிப்பிடப்பட வேண்டும்). மின்னஞ்சல்: adpdote@tndote.com

இது சாதாரண திட்டம் இல்ல. அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவன் கூட ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு போன்ற உலக டாப் 500 பல்கலைக்கழகத்தில் படிக்க ₹36 லட்சம் அரசே கொடுக்கும் மெகா திட்டம். கடைசி தேதி டிசம்பர் 31 தான்..!

Scroll to Top