No. Of Vacancies
3000
acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’உலகின் நண்பன் இந்தியா..!’’ ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>உலகில் தற்போது புவிசார் அரசியல் பதற்றம், புவிசார் பொருளாதார தாக்கம், புவிசார் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை நிகழ்ந்து வருகிறது. இவை அனைத்தும் பல்வேறு தாக்கங்களைத் கொண்டுள்ளன. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உடனடியான சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை நாம் எதிர்கொண்டாலும், உலக நிகழ்வுகள் உண்மையான பன்முகத்தன்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மட்டுமே, மேலும் முக்கியத்துவம் பெறும். ஆனால், நமக்கிடையே எவ்வாறு ஒத்துழைப்பு உருவாகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு இருக்கும். இதுகுறித்த விவாதத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நாம் ஏற்கனவே விவாதித்திருக்கிறோம்.
சவால்கள் குறித்து பேசும் போது, தீவிரவாதம் குறித்த பேச்சுகள் நம்மிடையே கண்டிப்பாக முதன்மையானதாக இடம்பெறும். உண்மை என்னவென்றால், இது சீர்குலைப்பதற்கான கருவியாக நாடுகளினால் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது உண்மையாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த சொந்த அனுபவங்கள் எங்களுக்கு உள்ளன. தீவிரவாதத்தை எந்த வடிவத்தில் வெளிப்படுத்துவதையும் நியாயப்படுத்த முடியாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உரிய தீர்வு தேவைப்படுகிறது. தீவிரவாதத்திற்கு நிதியளித்தல், ஆட்சேர்த்தல் ஆகியவற்றை திறம்பட எதிர்க்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டில் இருந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. இந்த விவகாரத்தில் நாம் இரட்டை நிலையைக் கொண்டிருக்க முடியாது.

புவிசார் பொருளாதாரம் என்ற நிலையில் பன்முகப்பட்ட, நம்பத்தகுந்த, நெகிழ்திறன் உடைய விநியோக அமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும். கொவிட் அனுபவத்திலிருந்து இதைப் பெறுவது முக்கியமாகும். மேக் ன் இந்தியா திட்டம், உலகளாவிய வளர்ச்சிக்கான எந்திரமாகவும், உலகளாவியப் பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தவும் உதவும். திறன் மேம்பாட்டில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக, உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.
நமது காலங்களில் தொழில்நுட்பம் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மட்டுமின்றி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் மாற்றத்தை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் யுகம் மேலும் நம்பகத்தன்மைக் கொண்டதாகவும், வெளிப்படைத் தன்மையுடைதாகவும் இருக்கவேண்டியது அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு ஆகியவை அதன் முக்கிய பிரச்சனைகளை எழுப்புகின்றன. அதே நேரத்தில், இந்தியா டிஜிட்டல் பொது கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதார உள்ளடக்கம் ஆகியவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நமது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவத்தில் இந்த இரண்டு துறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள், தொடர்புடையவர்களைக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் அவை விரிவுபடுத்துகிறது.
சவால்களை எதிர்கொள்ள உறுதியாக நிற்கும் அதே அளவிற்கு முன்னேற்றத்தின் பாதைகளைத் தீவிரமாகவும் கூட்டாகவும் கண்டறிவதும் முக்கியமானதாகும். உலகிற்கு சிறப்பான சேவையாற்றும் என்ற வகையில், புதிய போக்குவரத்துத் தொடர்புகளை உருவாக்குவது தற்போது உலகளாவிய விவாதமாக உள்ளது. இது தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்குப் பல கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இது அரசுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதாகவும் இருக்க வேண்டும். மேலும், பாகுபாடு இல்லாத வர்த்தகம், அண்டை நாடுகளுக்கு மாற்றுவதற்கான உரிமைகள் ஆகியவற்றின் அடித்தளத்திலும் இது கட்டமைக்கப்பட வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விரிவடைந்த குடும்பம் என்ற முறையில், இந்தியா – ஈரான் இடையே, சபஹார் துறைமுகத்திற்காக நீண்டகால உடன்பாடு ஒன்றை அண்மையில் நாங்கள் எட்டியிருக்கிறோம். இது நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசியப் பகுதிக்கு மகத்தான மதிப்பைத் தருவது மட்டுமின்றி இந்தியா-யுரேஷியா இடையேயான வர்த்தகத் தடைகளையும் அகற்றும்.

பிராந்தியத்தைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் பற்றி நான் பேசுகிறேன். எங்கள் மக்களுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு எங்களின் பிணைப்புக்கு அடித்தளமாக உள்ளது. எங்களின் ஒத்துழைப்பு, திட்டங்கள் மேம்பாடு, மனிதாபிமான உதவி, திறன் கட்டமைப்பு, விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும். ஆப்கன் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் இந்தியா உணர்ந்துள்ளது.
தற்போதைய சர்வதேச ஒழுங்கினை சீர்திருத்த, குடும்ப நிலையில் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உறுதி பூண்டுள்ளது. ஐநா சபை, அதன் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு இந்த முயற்சி நீடிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும். வெகுவிரைவில் இது குறித்து பொதுக் கருத்து உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதாரத் திட்டத்தை விரிவுபடுத்த இந்தியா குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான ஸ்டார்ட் அப் அமைப்பு, ஸ்டார்ட் அப், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான சிறப்புப் பணிக்குழு போன்றவற்றை நாங்கள் நிறுவனமயமாக்கியுள்ளோம். 100 யுனிகார்ன்கள் உட்பட இந்தியாவின் 1,30,000 புத்தொழில் நிறுவனங்கள் மூலமான எங்களின் அனுபவம் மற்றவர்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.

மருத்துவம், ஆரோக்கிய சுற்றுலாப் பற்றிக் குறிப்பிடும் போது, உலக சுகாதார நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
கல்வி விரிவாக்கம், பயிற்சி, திறன் கட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான முக்கியத் தூண்களாகும். சி-5 பங்குதாரர்களாக இருப்பினும், அண்டை நாடுகள் முதலில் என்பதாக இருப்பினும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதாக இருப்பினும் இவற்றின் மீது மேலும் கட்டுமானம் செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைவதற்குப் பார்வையாளர்களாக அல்லது பேச்சுவார்த்தை பங்குதாரர்களாக மேலும் பல நாடுகள் விரும்பும் நிலையில், நமது பொதுக்கருத்தை சிறந்த முறையிலும் ஆழமாகவும் தெரிவிக்க நாம் பாடுபட வேண்டும். ஆங்கிலத்திற்கு மூன்றாவது அலுவல் மொழி தகுதி அளிப்பது முக்கியமானதாகும்.
வெற்றிகரமான உச்சிமாநாட்டை நடத்துவதற்காக கஜக்ஸ்தானை நாங்கள் பாராட்டுகிறோம். விஸ்வ பந்து அல்லது உலகின் நண்பன் என்ற முறையில், இந்தியா அதன் அனைத்துப் பங்குதாரர்களிடம் ஆழமான ஒத்துழைப்புக்கு எப்போதும் பாடுபடும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு வரவிருக்கும் சீனத் தலைமைத்துவம் வெற்றிகரமாக அமைவதற்கும் எங்களின் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.
The post ’’உலகின் நண்பன் இந்தியா..!’’ ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post கவிஞர் வைரமுத்து மலேசியாவில், ‘பெருந்தமிழ்’ விருது பெற்றார் first appeared on Madras Murasu.
]]>கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின.
தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.
நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுலுத்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழகம் தலைவர், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தை சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி பற்றி மேனாள் காவல்துறை ஆணையர் புலவனின் புவி காக்கும் வேட்கை மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ தெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா திருமாவளவனும் விரிவாக பேசி கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பை பாராட்டினர்.

இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post கவிஞர் வைரமுத்து மலேசியாவில், ‘பெருந்தமிழ்’ விருது பெற்றார் first appeared on Madras Murasu.
]]>The post ”இலங்கை குடிமைப்பணியாளர்கள் 40 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி..!’’ சிறந்த நிர்வாகம் குறித்து பாடம் படித்தனர் first appeared on Madras Murasu.
]]>சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான வி.ஸ்ரீனிவாஸ், அந்த மையத்தின் செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் மையம் உருவாக்கப்பட்டதிலிருந்து அடைந்துள்ள கணிசமான முன்னேற்றம் குறித்து அறிமுகம் செய்தார்.
இணைப் பேராசிரியரும், பாடநெறி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஏ.பி.சிங், நிலம் கையகப்படுத்துதல், நிர்வாகத்தின் மாறிவரும் முன்னுதாரணம், அனைவருக்கும் வீட்டுவசதி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், கடலோரப் பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் பேரிடர் மேலாண்மை, பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை, அரசு மின்னணு சந்தை: நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், ஆதார் உருவாக்கம்: சிறந்த நிர்வாகத்திற்கான கருவி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுற்றுப் பொருளாதாரம் மற்றும் தேர்தல் மேலாண்மை போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
Shri V. Srinivas, Director General of the National Centre for Good Governance (NCGG) and Secretary of the Department of Administration Reform and Public Grievances (DARPG), gave an introduction of the operational framework of NCGG and the substantial progress achieved since the center’s formation. In his address, he provided profound insights into the New Paradigms in Governance (2014-2024), highlighting exemplary success in embracing digital technology for bringing citizens and government closer under the policy maxim “Maximum Governance – Minimum Government”. Notable achievements such as the Public Grievances Redressal through CPGRAMS were highlighted, emphasizing the benefits for the masses. Furthermore, pivotal e-governance frameworks including E-Unnat, Nivesh Mistra, and Seva Sindhu, illustrating India’s commitment to leveraging digital solutions for comprehensive governance were presented. The primary objective of this program is to facilitate the exchange of knowledge and innovations that have been implemented in India to enhance governance and public service delivery. The participants were encouraged to explore and replicate successful e-governance models from India in Sri Lanka, emphasizing the potential for transformative impact.
Giving an overview of the Dr. AP Singh, Associate Professor and Course Coordinator said that NCGG is sharing various initiatives taken in the country such as land acquisition, changing paradigm of governance, housing to all: leveraging digital technology, disaster management with special reference to coastal region, PM Jan Aarogya Yojna, public private partnerships, Swamitva scheme, GeM: bringing transparency in governance, Making of Aadhar: A tool for good governance, Digital public infrastructure , circular economy and election management among others. Field visits to renowned institutions such as the Indira Gandhi Forest National Academy, Morarji Desai National Institute of Yoga, and the iconic Taj Mahal further enrich the learning experience, offering practical insights into governance and societal dynamics.
NCGG in partnership with MEA, has imparted training to civil servants of 17 countries, viz. Bangladesh, Kenya, Tanzania, Tunisia, Seychelles, Gambia, Maldives, Sri Lanka, Afghanistan, Laos, Vietnam, Nepal, Bhutan, Myanmar, Ethiopia, Eretria, and Cambodia. The capacity building program will be supervised by Dr. A.P Singh, Associate Professor and Course Coordinator, Dr. Mukesh Bhandari, Associate Course Coordinator and dedicated team of NCGG.
The post ”இலங்கை குடிமைப்பணியாளர்கள் 40 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி..!’’ சிறந்த நிர்வாகம் குறித்து பாடம் படித்தனர் first appeared on Madras Murasu.
]]>The post ”இஸ்ரேலில் கட்டுமான பணி..!” 10,000 பேருக்கு வேலை ரெடி first appeared on Madras Murasu.
]]>இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
இஸ்ரேல் நாட்டில் கட்டுமானப் பணிக்கு 10,000 பேர் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு 3 வருடம் பணி அனுபவமுள்ள 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ப்ளாஸ்டெரிங் பணி ( Plastering work), செராமிக் டைலிங் (Ceramic Tiling), கட்டிட ஃபார்ம் பணி (Building Form work) மற்றும் இரும்பு பென்டிங் (Iron Pending) ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
மாத ஊதியமாக சுமார் ரூ.1,37,000 வரை பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலை மார்ச் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேலை விபரம் : ROD BENDER – (கட்டுமான கம்பி வளைப்பவர்) :
3000
135000 – 137000
Male
21 – 45
IRON BENDING
IRON BENDING ,
29-Feb-2024
3000
135000 – 137000
Male
21 – 45
Framework/Shuttering Carpenter
Framework/Shuttering Carpenter ,
29-Feb-2024
2000
135000 – 137000
Male
21 – 45
PLASTERING
PLASTERING ,
2000
135000 – 137000
Male
21 – 45
CERAMIC TILE
CERAMIC TILE ,
29-Feb-2024
The post ”இஸ்ரேலில் கட்டுமான பணி..!” 10,000 பேருக்கு வேலை ரெடி first appeared on Madras Murasu.
]]>The post வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள் தொடர்பான திருமணப் பிரச்சனைகள் குறித்த சட்டம்..!” இந்திய சட்ட ஆணையம் அறிக்கை first appeared on Madras Murasu.
]]>வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணப் பதிவு மசோதா, 2019 (என்.ஆர்.ஐ மசோதா, 2019) குறிப்பை இந்திய சட்ட ஆணையம் பெற்றது. என்.ஆர்.ஐ மசோதா, 2019 உட்பட உடனடி விஷயம் தொடர்பான சட்டம் குறித்து ஆழமான ஆய்வை நடத்திய ஆணையம், முன்மொழியப்பட்ட மத்திய சட்டம் என்.ஆர்.ஐ-கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டுக் குடிமக்கள் இந்தியக் குடிமக்களின் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு விரிவானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது.
இத்தகைய சட்டம் என்.ஆர்.ஐ.களுக்கு மட்டுமல்லாமல், குடியுரிமைச் சட்டம், 1955-ன் பிரிவு 7-ஏ-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள்’ (ஓ.சி.ஐ) என்ற வரையறைக்குள் வரும் நபர்களுக்கும் பொருந்தும். என்.ஆர்.ஐ.-கள் / ஓ.சி.ஐ.-கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இடையிலான அனைத்துத் திருமணங்களும் இந்தியாவில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மேலும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேற்கூறிய விரிவான மத்திய சட்டத்தில் விவாகரத்து, வாழ்க்கைத் துணையைப் பராமரித்தல், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, என்.ஆர்.ஐ.-கள் / ஓ.சி.ஐ.-கள் மீதான சம்மன்கள், வாரண்டுகள் அல்லது நீதித்துறை ஆவணங்களை வழங்குதல் போன்றவை அடங்கும். மேலும், திருமண நிலையை அறிவிப்பது, வாழ்க்கைத் துணையின் பாஸ்போர்ட்டை மற்றவருடன் இணைப்பது, கணவன், மனைவி இருவரின் பாஸ்போர்ட்டுகளிலும் திருமணப் பதிவு எண்ணைக் குறிப்பிடுவது ஆகியவற்றைக் கட்டாயமாக்குவதற்கு பாஸ்போர்ட் சட்டம், 1967-ல் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
The post வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள் தொடர்பான திருமணப் பிரச்சனைகள் குறித்த சட்டம்..!” இந்திய சட்ட ஆணையம் அறிக்கை first appeared on Madras Murasu.
]]>The post ’’கைகள் இல்லாமல் வரலாறு படைத்த காஷ்மீர் ஷீத்தல்..!’’ மகேந்திரா கார் பரிசு first appeared on Madras Murasu.
]]>ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ளது இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமம் லோய் தார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிறந்தவர் ஷீத்தல் தேவி. இவரது தந்தை ஏழை விவசாயக் கூலி. அந்தப் பகுதியில் உள்ள நெல் மற்றும் காய்கறி பண்ணையில் நாள் முழுவதும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இது குடும்பத் தேவைக்கு போதவில்லை. அந்த குடும்பத்துக்கு சொந்தமான மூன்று நான்கு ஆடுகளை வளர்த்து வருகிறார் அவரது அம்மா. உடன் பிறந்தது ஒரு தங்கை. படிப்பறிவு இல்லாத குடும்பத்தின் மூத்த மகளான ஷீத்தல் தேவி ஃபோகோ மெலியா என்ற பிறவி நோய்க்குறைபாட்டால் கைகள் இன்றிப் பிறந்தார். இது ஒரு அரிய வகை குறைபாடு. கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட தாலிடோமைடு என்கிற மருந்தின் பக்க விளைவு.
இன்ப அதிர்ச்சி திருப்புமுனை!
2021 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வு அது. பள்ளி சென்று கொண்டிருந்த ஷீத்தல் தேவியும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வின் போது ஷீத்தலின் விளையாட்டுத் திறமை ராணுவத்தினரால் கண்டறியப்பட்டது. ராணுவ அதிகாரிகளான பயிற்சியாளர்கள் அபிலாஷா சவுத்ரி, குல்தீப் வாத்வான் ஆகியோர் ஷீத்தலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, முதலில் செயற்கை முறையில் அறுவை சிகிச்சை செய்வதென்று முடிவு செய்தனர். ஆனால், அது சாத்தியமில்லை எனக் கை விரித்த மருத்துவர்கள், கைகள் இல்லை என்றாலும், அவரின் மேல் உடலமைப்பு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தினர். அப்போதுதான், கால்களை கொண்டு மரம் ஏறுவதில் நிபுணத்துவம் உள்ளதாக ஷீத்தல் கூறியது ராணுவ பயிற்சியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு லண்டன் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் மாட் ஸ்டேட்ஸ் மேனனின் திறமை, வில்லை பிடிக்க தனது கால்களை திறமையாகப் பயன்படுத்தியது. அர்ப்பணிப்புடன் செயல்பட்டது நினைவுக்கு வந்தது. இதனையடுத்து, ஷீத்தல் தேவியை வில்வித்தை பயிற்சி மையத்தில் சேர்த்து ஊக்கப்படுத்தினர். அதற்குப் பிறகு ஷீத்தலின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்டது. திருப்புமுனையை ஏற்படுத்தியது. குடும்பத்தின் வறுமையை அறிந்து தத்தெடுத்துக் கொண்ட ராணுவம், ஷீத்தல் தேவியின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பை முடித்தார். மருத்துவ உதவி மற்றும் வில்வித்தை விளையாட்டு பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. பயிற்சியில் சேர்ந்த 6 மாதத்தில் சிறந்த வீராங்கனையாக உருவெடுத்தார். இரண்டு கைகளும் இல்லாமல், சிறிய விஷயத்துக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பதால் கைகள் இல்லாத ஷீத்தல் தேவிக்கு கால்களால் இயக்கக்கூடிய வில்லும் அம்பும் உள்ளூரில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன.
சவால் நிறைந்த பயணம்!
செயற்கை கை பொருத்தும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. ஆரம்பத்தில் வில்லை அவரால் தூக்க முடியவில்லை. மிகவும் கடினமாகவே இருந்துள்ளது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இரண்டு கால்களையும் பயன்படுத்தி குறி பார்த்து அம்புகளை ஏவினார். பாரா வில்வித்தை வீரர்கள் மட்டுமல்லாமல், வழக்கமான வில்வித்தை வீரர்களுடன் போட்டியிட்டு அசாதாரணமான தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் ஒரு வில்லை தூக்குவதற்கு கூட கஷ்டப்பட்ட அவர், தொடர் பயிற்சியின் மூலம் தினமும் 50 முதல் 100 அம்புகளை வீசத் தொடங்கினார்.
பின்னர் ஒரே நாளில் 300 அம்புகளை வீசும் அளவுக்கு முன்னேற்றம் கண்டார். இதன் மூலம் வில்வித்தை போட்டியில் சாதிக்க முடியும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை பயிற்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது. அதோடு மட்டு மல்ல, அவரது சொந்த கிராமத்து நண்பர்களின் ஆதரவும் அதிகம் இருந்ததால் கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கேலோ இந்தியா கேம்ஸ் என்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளினார். பயிற்சியில் பங்கேற்ற 11 மாதத்தில் சோனா பட்டில் நடந்த ஜூனியர் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிக்குள் முதன்முதலாக களம் இறங்கி, முன்னணி மற்றும் நட்சத்திர வீரர்களை எதிர்கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதன் தொடர்ச்சியாக, ஓப்பன் நேஷனல் விளையாட்டில் நட்சத்திர வீரர்களுடன் போட்டியிட்டு நான்காவது இடத்தை பிடித்தார்.
சாதனையும் அங்கீகாரம்!
அடுத்த இலக்கு சர்வதேசப் போட்டியாக அமைந்தது. சமீபத்தில் செக் குடியரசில் நடைபெற்ற பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். மன உறுதியுடன் களம் இறங்கி பிரமிக்க வைக்கும் வகையில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த மாதம் சீனாவில் நடந்த ஆசியா பாரா விளையாட்டுப் போட்டியின் தனிநபர் மற்றும் கலப்பு குழு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இரண்டு தங்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று சாதனையின் உச்சத்தை அடைந்தார் ஷீத்தல் தேவி, உலக வில்வித்தை வரலாற்றில் கைகள் இல்லாமல் கால்களால் வில்லை இயக்கும் முதல் வீராங்கனையாக தனது பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்த இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மகேந்திரா நிறுவனமும் கார் ஒன்றை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. இப்போது, இவர் பெயர்தான் இண்டர்நெட் உலகில் அதிகம் தேடப்படுகிறது. காரணம் அவர் தங்கம் வென்றார் என்பதற்காக மட்டுமல்ல. அதையும் தாண்டி தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாகத் திகழ்கிறார் என்பதற்காகவே. வில்வித்தையை தாண்டி, உடல் ரீதியான சவால்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள தனி நபர்களை ஊக்குவிக்கிறது. குறைபாடு உள்ளவர்கள் தடைகளைத் தாண்டி லட்சியங்களை வெல்ல முடியும் என்கிற அசைக்க முடியாத உறுதியையும், நம்பிக்கையையும் உலகுக்கு உணர்த்துகிறது.
The post ’’கைகள் இல்லாமல் வரலாறு படைத்த காஷ்மீர் ஷீத்தல்..!’’ மகேந்திரா கார் பரிசு first appeared on Madras Murasu.
]]>The post ’’தயாராகும் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி..!’’ ’ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, நிகழ்வு செயற்குழு’ அமைக்கப்பட்டது first appeared on Madras Murasu.
]]>24 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும் படைப்பாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி 2023 ஜனவரியில் முதன்முதலாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. எண்ணற்ற தமிழ்நூல்களை பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவும், பல்வேறு நாடுகளின் படைப்புகளை தமிழ் மொழிக்குக் கொண்டுவரவும் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த புத்தகக் காட்சியில் கையெழுத்தாகின. இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி இரண்டாவது ஆண்டாக வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கி விட்டன.
இதற்குரிய இலச்சினை, தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு நல்கை, கெஸ்ட் ஆஃப் ஹானர் என்ற பிரிவில் கௌரவிக்கப்படும் நாடு (மலேசியா) முதலானவை கடந்த ஜூன் மாதமே பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. அதே நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு புத்தகக்காட்சி நடைபெறும் என இடமும் நாளும் அறிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான CIBF2024ஐ சிறப்புற நடத்த பொதுநூலக இயக்ககத்தின் இயக்குநர் இளம்பகவத், பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர் குழுவோடு பிராங்க்ஃபர்ட்டில் நடந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான பன்னாட்டுப் பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சிக்கென அழைப்பு விடுக்கப்பட்டது. பலரும் ஆர்வத்தோடு தங்களுடைய வருகையை உறுதி செய்தனர்.
இப்போது இந்நிகழ்வை திறம்பட நடத்த மூன்று குழுக்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, நிகழ்வு செயற்குழு என மூன்று குழுக்களில் அரசு அலுவலர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வல்லுநர்கள் என பல்வேறுபட்ட ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆலோசனைக் குழுவில் தமிழ்வளர்ச்சித்துறையின் இயக்குநர் முனைவர்.அருள், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு தலைவரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்கள் இமையம், எஸ்.ராமகிருஷ்ணன், ச.தமிழ்ச்செல்வன் முதலானோரும், பதிப்பாளர் கண்ணன், பத்திரிகையாளர்கள் அசோகன் மற்றும் ஆரோக்கியவேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை உலகத் தரத்தில் நடத்துவதற்கும், அதற்குரிய நிகழ்விடத்தை வடிவமைக்கவும், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்புக்கும், தமிழ் இலக்கியத்தை எப்படியெல்லாம் உலக அளவில் எடுத்துச் செல்லலாம் என திட்டமிடுவதற்கும், இந்தியாவிலும் பன்னாட்டு அளவிலும் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க வழிமுறைகளை வகுப்பதற்கும் ஆலோசனைகளை வழங்கும்.
ஒருங்கிணைப்புக் குழுவில், பொது நூலக இயக்ககத்தின் இணை இயக்குநர், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர், மொழிபெயர்ப்பாளர் மினி கிருஷ்ணன், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன், பதிப்பாளர் ஒளிவண்ணன், விற்பனையாளர் முகமது அலி, பதிப்பாளர் முரளி கண்ணதாசன் முதலானோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு பன்னாட்டுப் பதிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்யும். பங்கேற்பாளர்களுக்கான அரங்கை ஒதுக்கீடு செய்வது, பதிப்பாளர் சந்திப்புகளை ஒருங்கிணைப்பது, கருத்தரங்குகளை வடிவமைப்பது, புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வினை ஒருங்கிணைத்தல், துணைக் குழுக்களை உருவாக்குதல், நிகழ்வுகளுக்கான தலைப்பு, பேச்சாளர்கள் நேரம், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவற்றை இறுதி செய்தல், நிகழ்வினை விளம்பரப்படுத்துதல் ஆகிய வேலைகளை செய்யும். நிகழ்வு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொது நூலக இயக்ககத்தின் துணை இயக்குநர், பதிப்பாளர் வேடியப்பன், பதிப்பாளர் அமுதரசன், பதிப்பாளர் கார்த்திக் புகழேந்தி, பதிப்பாளர் கவிதா சொக்கலிங்கம், பதிப்பாளர் எழுத்தாளர் இவள் பாரதி, பதிப்பாளர் நிவேதிதா லூயிஸ், நூலகர் காமாட்சி, நூலகர் தினேஷ் குமார் முதலானோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு துணைக் குழுக்களை ஏற்படுத்தி நிகழ்வு திறம்பட நடைபெறத் தேவையான வேலைகளை மேற்கொள்ளும். மொழிபெயர்ப்பு மானிய திட்டத்தில் பதிவுசெய்வதற்கான உதவிகளைச் செய்யும். பதிப்புரிமை நூற்பட்டியலை உருவாக்கும்.
இந்த முறை சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. தமிழில் வெளியான நூறு நூல்களை இருபத்தைந்துக்கும் அதிகமான பன்னாட்டு மொழிகளில் கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
The post ’’தயாராகும் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி..!’’ ’ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, நிகழ்வு செயற்குழு’ அமைக்கப்பட்டது first appeared on Madras Murasu.
]]>The post ”கணித்தமிழ் கட்டுரைகள், கணித்தமிழ் நிரலாக்கப் போட்டி..!” பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு 2024 அழைக்கிறது first appeared on Madras Murasu.
]]>இந்த உலகை இனி வழிநடத்தப்போவது தகவல் தொழில்நுட்பத் துறைதான் என்பதை உணர்ந்து, இந்தத் துறைக்கென இந்தியாவிலேயே முதன்முறையாகக் கொள்கைகளை வகுத்த மாநிலம் தமிழ்நாடு. ஆண்டு 1997. இதிலிருந்து இரண்டு ஆண்டுகளில், ‘தமிழிணையம்99’ மாநாடு நடத்தப்பட்டது.
இதன் விளைவாக 2000–இல் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். இந்நிறுவனம், இப்போது மீண்டும் ஒரு பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டை (பிப்ரவரி 8-10, 2024) ஒருங்கிணைக்கிறது.
25 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த மாநாடு, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் தமிழுக்கான இடம் குறித்து விவாதிக்கும் விதமாக அமையும். கணித்தமிழில் ஆர்வமுள்ளவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்.
இயந்திர மொழிபெயர்ப்பு
கணித்தமிழ்24 மாநாடு உலகெங்கிலும் உள்ள வல்லுநர்களையும் ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து, கணினித் தமிழின் வளர்ச்சிகள் குறித்து விவாதிப்பதற்கான நிகழ்வாகும். கணித்தமிழ்24 மாநாடு, தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்பத் தளங்களில் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், புதிய சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், கூட்டுச் செயல்பாட்டை வளர்ப்பதற்குமான தளமாக அமையும்.
இயற்கை மொழி ஆய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, LLM, பேச்சைப் புரிந்துகொள்ளல், எழுத்துக் குறியாக்கம், மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட கணினித் தமிழின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஆய்வுரைகள், கலந்துரையாடல், ஆய்வுக் கட்டுரைகள், செயல் விளக்கம் போன்றவையும் இதில் இடம்பெறும்.
கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரையும் ஈர்க்கும் விதமாக இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ் ஆர்வமும் ஒருமித்த சிந்தனையும் கொண்ட நபர்களை ஒருங்கிணைப்பதற்கான சூழலை இந்த மாநாடு உருவாக்கும்.
செம்மொழி தமிழ்
கணித்தமிழ்24 மாநாட்டின் சிறப்பம்சங்களுள் மிக முக்கியமான ஒன்று, மொழித் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் ஆகும். சமர்ப்பிக்கப்படும் இந்த ஆய்வுக் கட்டுரைகளின் தரமும் பொருத்தப்பாடும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் மாநாட்டு அமர்வுகளில் விவாதிக்கப்படும். மாநாட்டில் பங்கேற்பவர்கள் கட்டுரையாளர்களுடன் கலந்துரையாடி, மாறிவரும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆழமான, பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். கணினித் தமிழின் வளர்ந்துவரும் போக்குகள், அது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவாதமும் இடம்பெறும்.
மொழித் தொழில்நுட்பத்தின் அண்மைய வளர்ச்சிகள் குறித்த உரைகளும் மாநாட்டு அமர்வில் இடம்பெறும். உலகின் புகழ்பெற்ற வல்லுநர்கள் உரை நிகழ்த்துவார்கள். இந்த உரைகள் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்த பரந்துபட்ட கண்ணோட்டத்தை வழங்குவதோடு, புதுமையான முயற்சிகளுக்கும் வழிவகுக்கும்.
மொழித் தொழில்நுட்பத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், அதற்கான மென்பொருள் உருவாக்குவதற்கான தேவைகள் குறித்து அறிஞர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கும் குழு விவாதங்கள் நடைபெறும்.
நிரலாக்கப் போட்டியில் பங்குபெற்று கணித்தமிழ் தொடர்பான சிக்கல் கூறுகளுக்குச் சிறந்த தீர்வுகள் வழங்கிய குழுக்களின் செயல்விளக்கங்களும் இந்த மாநாட்டின் பகுதியாக இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள வல்லுநர்களை ஒன்றிணைப்பதன் மூலம் கணித்தமிழ் அறிவை மேம்படுத்துவதற்கும், மொழித் தொழில்நுட்பத்தில் கூட்டுச் செயல்பாட்டை உருவாக்குவதற்கும் ஒரு முக்கியமான தளமாகக் கணித்தமிழ்24 மாநாடு அமையும். செம்மொழியான தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் புதிய தலைமுறைக்குக் கடத்துவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியப் பங்காற்றும் கணித்தமிழ்24 மாநாடு!
கணித்தமிழ் கட்டுரைகள்
தொழில்நுட்ப மாநாடுகளைப் பொறுத்தவரை ஆய்வுக் கட்டுரைகள் முதன்மையானவையாகும். ஆய்வறிஞர்கள் தங்கள் கண்டறிதல்களை வெளிப்படுத்தவும் கற்போருக்கு உதவும் தளமாகவும் அவை பங்களிக்கின்றன. இந்தக் கட்டுரைகள் ஆய்வறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிரவும், பின்னூட்டங்களைப் பெறவும், பல்துறை அறிஞர்களிடம் விவாதத்தை எழுப்பவும் வாய்ப்பளிக்கின்றன.
மாநாடானது ஆய்வறிஞர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தவும், அங்கீகாரத்தைப் பெறவும், ஒருமித்த கருத்துகளை ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கிறது. மேலும், மாநாடுகளில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் புதிய சிந்தனைகளும் கண்டறிதல்களும் அறிவை விரிவாக்கப் பயன்படும். ஆகவே, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேம்படுத்தும் அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், பல்வேறு துறைகளில் தமிழின் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவும் ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட உள்ளன.
தமிழ் இணையக் கல்விக்கழகம் கீழ்க்காணும் பொருண்மைகளிலும், கணித்தமிழ் தொடர்பான இதர பொருண்மைகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறது:
* தமிழில் இயற்கை மொழி ஆய்வு
* இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் பன்மொழித் தொழில்நுட்பங்கள்
* தமிழ்ப் பேச்சுணரி மற்றும் தொகுப்பி
* பெரிய மொழி மாதிரிகள்
* தமிழுக்கான எழுத்துணரி
* தமிழ் மொழியின் பேச்சு மற்றும் உரையின் உணர்வுப் பகுப்பாய்வு
* தமிழ்த் தகவல்களை மீட்டெடுத்தல் மற்றும் தரமான தரவுகளைக் கண்டறிதல்
* தமிழ் விரிதரவு உருவாக்குதல் மற்றும் மொழியியல் வளங்கள்
* கணினி மொழியியலுக்கான உருபனியல் மற்றும் தொடரியல்
* தமிழ்க் கல்வி மற்றும் மின் ஆளுமைக்கான மொழித் தொழில்நுட்பங்கள்
* தமிழ் மின் கற்றலுக்கான தளங்கள் மற்றும் கருவிகள்
* கணினித் தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழிக் கற்றல் மென்பொருள்கள்
* பன்-மொழிகளுக்கான தரவுதளம்
* இயற்கை மொழி ஆய்விற்கு தேவைப்படும் கருவிகள்
* எண்மமயமாக்கலில் தமிழின் பங்கு (Role of Tamil in Spatial Computing)
பிற தலைப்புகள்
கட்டுரை சமர்ப்பித்தல்
ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தினைக் குறிச்சொற்களுடன், 300 சொற்களுக்கு மிகாமல் 15.11.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். அதன்பின் முழுமையான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆய்வுக் கட்டுரை 2500 முதல் 5000 சொற்களுக்குள் இருக்க வேண்டும். (முகவுரை, ஆய்வு முறைமை, குறிப்புதவி விவரங்கள் உட்பட). சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அசலானதாகவும், இதற்கு முன்பு வேறெங்கும் வெளியிட / சமர்ப்பிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையின் மையக் கருத்தை விளக்கும் வகையில், கட்டுரைத் தலைப்பு 20 சொற்களுக்குள் அமைய வேண்டும். சிலேடை, மரபுத் தொடர் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையினைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ அளிக்கலாம். தமிழில் TAU_Marutham எழுத்துருவும், ஆங்கிலத்தில் Times New Roman எழுத்துருவும் பயன்படுத்த வேண்டும். எழுத்துருவின் அளவு 12pt ஆகவும், வரிகளுக்கிடையேயான இடைவெளி 1.5 என்னும் அளவிலும் இருக்க வேண்டும்.
கட்டுரைகள் தன்விவரக் குறிப்புடன், கணினி மொழி நுட்பத்தில் தங்களின் பங்களிப்பு தொடர்பான தகவலையும் இணைத்து 25.12.2023க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கணித்தமிழ் நிரலாக்கப் போட்டி – வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் தமிழ்
நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் நிரலாக்கப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அர்ப்பணிப்புமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், தொலைநோக்குச் சிந்தனையாளர்கள், அனுபவமிக்க மொழியியல் அறிஞர்கள், கல்விச் சமூகத்தினர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சி இது. இதன் மூலம், தமிழ் மொழியின் பரவலான இருப்பையும், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் தமிழ் மொழியின் நிலையையும் வெளிக்கொண்டுவர முடியும்.
மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ் இணையக் கல்விக்கழகமானது StartupTN நிறுவனத்துடன் இணைந்து கணித்தமிழ்24 மாநாட்டின் ஒரு பகுதியாக நிரலாக்கப் போட்டியினை நடத்துகிறது.
நோக்கங்கள்:
டிஜிட்டல் யுகத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டையும் புரிதலையும் மேம்படுத்தும் புதுமையான கருவிகள் உருவாக்குவதை ஊக்குவித்தல்.
மொழியியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ் மொழியில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துதல்.
கல்வி, உள்ளடக்க உருவாக்கம், தகவல்தொடர்பு போன்ற தளங்களில் பரந்துபட்ட பயனர்கள் பயன்படுத்தும் விதமாகத் தமிழ் மொழியைக் கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குதல்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியைச் செழுமையுடன் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குதல். இதன் மூலம், மொழி தொடர்பான தொழில்நுட்ப சாத்தியங்களை விரிவாக்குதல்.
போட்டி நடைமுறை :
போட்டிக்கான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல் : மொழித் தொழில்நுட்பத் துறை தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துக் கண்டறிதல். பின்னர், இவற்றை விரிவான மதிப்பாய்வுக்கு உட்படுத்தி, தீர்வுகாண வேண்டிய அம்சங்கள், சாத்தியக்கூறுகள், அவற்றின் தாக்கம் குறித்து மதிப்பீட்டுக் குழு ஆராயும்.
தலைப்புகளை வெளியிடுதல் : தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் அறிவிக்கப்பட்டு, த.இ.க., StartupTN, இதர சமூக ஊடகத் தளங்கள் மூலமாக அனைவரிடமும் கொண்டு செல்லப்படும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாணவர்களிடையே இந்த முயற்சியை ஊக்குவிப்பதற்காக வெவ்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மதிப்பீட்டுக் குழு பரிசீலனை : பங்கேற்பாளர்களின் யோசனைகளை மதிப்பிட்டு, அவற்றிலிருந்து சிறந்த யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். இவர்கள் போட்டியின் அடுத்த கட்டத்துக்குச் செல்வர்.
வழிகாட்டிகளைத் திரட்டுதல் : மொழியியல், மொழித் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களையும், புத்தொழில் நிறுவனங்கள் / தொழில்முனைவோரையும் அடையாளம் கண்டு மாணவர்களுக்கு வழிகாட்டச் செய்தல்.
வழிகாட்டிகளை இணைத்தல் : கண்டறியப்பட்ட வழிகாட்டிகளை போட்டியிடும் குழுக்களுடன் இணைத்து, தேவையான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் தொடர்ந்து வழங்க வழிவகை செய்யப்படும்.
முகாம்கள் (இணையவழி / நேரடி) நடத்துதல் : இணையம் வழியாகவும் நேரடியாகவும் போட்டியாளர்களுக்குப் பயன்தரக்கூடிய ஆலோசனைகளை வழங்க முகாம்கள் நடத்தி அவர்களுக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படும் .
தொழில்நுட்ப உருவாக்கத்துக்கான கால அளவு: பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் பயனளிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு அவகாசம் அளித்தல். உருவாக்கும் காலகட்டத்தில், தேவையான உதவிகள் வழங்குதல்.
இறுதி நிரலாக்கப் போட்டி: இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தாங்கள் உருவாக்கிய தீர்வுகள் குறித்து மதிப்பீட்டாளர்களின் முன்பு வெளிப்படுத்த வாய்ப்பு வழங்குதல். சிறந்த போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தல்.
மாநாட்டு நிகழ்வு: தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் கணித்தமிழ்24 மாநாட்டில் செயல்விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கான பரிசுகள் மாநாட்டின்போது வழங்கப்படும்.
நிரலாக்கப் போட்டி முடிந்த பின், பயனுள்ள தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
உருவாக்கப்பட்ட மென்பொருட்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக www.tamilvu.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சிக்கல் கூறுகள்
* பட விவரக் குறிப்பு உருவாக்கம் (Image Annotation System)
* தமிழ் மொழி விளையாட்டு (Tamil Language Gamification)
* தமிழ் மொழிக் கற்றல் (Tamil Language Learning)
* தமிழ் எழுத்துணரி (Tamil OCR)
* தமிழ்ப் பேச்சைப் (வட்டார வழக்கு) புரிந்துகொள்ளுதல் (Tamil Speech (Dialect) Recognition)
* தமிழ் உள்ளடக்க உருவாக்கம் (Tamil Content Creation)
* தமிழ்மொழி IoT ஒருங்கிணைப்பு (Tamil Language IoT Integration)
* தமிழ் உரையாடி (Tamil Chatbot)
* தகவல் திரட்டிகள் (Aggregators)
* கல்வெட்டு எழுத்து மாற்றி (Inscription Converter)
* தமிழ் நிகழ்த்து கலைகள் மற்றும் பாரம்பரிய நாடக வடிவங்களுக்கான தளம் ஒன்றை நிகழ்த்து கலைஞர்களது விவரங்களுடன் உருவாக்குதல் (Develop a platform to showcase Tamil performing arts and traditional theatre forms with a directory of performers)
* பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகத் தமிழர் பாரம்பரிய உணவுகள், திருவிழாக்கள், பாரம்பரியத் தலங்களைக் காட்சிப்படுத்த ஒரு பண்பாட்டுத் தளத்தை உருவாக்குதல் (Develop a cultural platform to showcase Tamil traditional foods, festivals and heritage sites to promote cultural tourism)
* ஆய்வாளர்கள் தங்கள் தொழில்நுட்பம் சார்ந்த/சாராத ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்கான தளத்தை உருவாக்குதல் (Develop a platform for researchers to publish their technical / non- technical research findings in Tamil language with a plagiarism detection tool and curation tool for reviewers)
* மண்டலவாரியாகத் தொழிற்துறைகளுடன் மொழியியல் வல்லுநர்களை இணைக்கும் தளத்தை உருவாக்குதல் (Develop a portal to connect nearby linguistic experts with the industries region wise to promote their goods and services to the larger tamil speaking consumers)
* தமிழ் இயங்குதளம் (Tamil Operating System)
* தமிழில் வேலைவாய்ப்புத் தளம் (Tamil Job Portal)
* தமிழில் இயற்கை மொழி ஆய்வு (Tamil Language NLP)
* தமிழில் எழுத உதவும் கருவி (Tamil Writing Tool)
* தமிழிலிருந்து பிரெய்லி (Tamil to Braille)
* தமிழ் உள்ளடக்கப் பரிந்துரைப் பொறி (Tamil Content Recommendation Engine)
* பிற தலைப்புகள்
தொடர்புக்கு
கூடுதல் விவரங்களுக்கு: https://www.kanitamil.in/
கணித்தமிழ்24 மின்னஞ்சல் : kanitamil24@gmail.com தொலைபேசி : +91 44 2220 9400
The post ”கணித்தமிழ் கட்டுரைகள், கணித்தமிழ் நிரலாக்கப் போட்டி..!” பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு 2024 அழைக்கிறது first appeared on Madras Murasu.
]]>The post ’’துப்பு இல்லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>இலங்கையில் மலையகத்தில் தமிழர் குடியேறி -– அந்த மண்ணை வாழ்வித்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் மலையகத் தமிழ் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதயத்தின் அடியாழத்தில் இருந்து அன்புடனும் அக்கறையுடனும் தெரிவித்த வாழ்த்துகள் ஆகும் இவை.
*மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள் ஆவார்கள்.
மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகட்டத்தில் இருந்து தொடங்குகிறது.
*இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. பின்னர், ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.
*பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும் -– காடுகளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்களாக விளைவித்தும் பின் தங்கிய பொருளாதாரத்தை முன்னணி பொருளாதாரமாக ஆக்கியவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவார்கள்.
*இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.
– – என்று அந்த மக்களின் மகத்தான உழைப்பைப் பாராட்டி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
“இத்தகைய மலையக மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.”என்பதையும் வலியுறுத்தி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். ஏனென்றால் அம்மக்களின் நிலைமை என்பது பெரிதாக மாறிவிடவில்லை. இலங்கையை உயர்த்திய, மேம்படுத்திய அவர்களது வாழ்க்கை மேலும் முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முதல்வர் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.
முதலமைச்சர் அவர்களின் உரை, இலங்கையில் நடைபெறும் விழாவுக்காக தயாரிக்கப்பட்டது ஆகும். இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களது 200 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.“நாம் 200 – – ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பர்யத்தின் முழக்கம்”என்பது இந்த நிகழ்ச்சியின் பெயர். இந்த நிகழ்ச்சியை இலங்கை மலையகத் தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்டத் தொழில் துறை மற்றும் அரசு தொழில் துறை அமைச்சகம் முன்னெடுத்தது. அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழாவில் ஒளிபரப்பப்படவில்லை.
இது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,‘தமிழ்நாடு முதலமைச்சரின் உரையை ஒளிபரப்பக் கூடாது என்று இந்திய பா.ஜ.க. அரசு தடை போட்டுவிட்டது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட ஜனநாயக மறுப்பு, தமிழர் விரோதச் செய்கை இருக்க முடியாது.
முதலமைச்சர் உரையைத் தடை செய்வதன் மூலமாக, மலையகத் தமிழர்கள் மீதான தி.மு.க.வின் பற்றுதலை மறைக்கும் சதிச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளது.
இதே நிகழ்வில் இன்னொரு சதியையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளதை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
“அந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முறையான அழைப்பு தமிழ்நாடு அரசிற்கு அனுப்பப் பட்டது. முதலமைச்சர் அவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலையில், என்னை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் பணித்திருந்தார்கள். இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிலிருந்து உரிய அனுமதியினை பெறு வதற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. political clearance என்று சொல்லக்கூடிய வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்,
அக்டோபர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறையின் வாயிலாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது. விழா நவம்பர் 2-ஆம் தேதி மதியம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்டரை மணி வரை வரவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் இரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப்பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக நான் பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்ட காரணத்தினால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்தகைய அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் இதனை தெரிவித்துவிட்டு பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்டோம்.”என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
வெளிநாட்டில் நடைபெறும் விழாவுக்கு அனுமதி தருவதில் ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டுள்ளது என்பதன் மூலமாக – எதனால் இப்படி நடந்து கொண்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக இலங்கைத் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கிய பா.ஜ.க., இப்போது மலையகத் தமிழர்கள் விழாவில் எத்தகைய சதிச்செயல்களில் ஈடுபடுகிறது என்பது புரிகிறது. இந்த நிலையில் மலையகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றிருக்கிறார்.
இன்னமும் இந்திய மீனவர்கள், படும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கத் துப்பு இல்லாத பா.ஜ.க. இலங்கைக்குப் போய் மலையக மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பது காலக் கொடுமையே ஆகும்.
The post ’’துப்பு இல்லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்..!’’ ஜப்பான் கல்விச் சுற்றுலா கொடுத்த புது அனுபவங்கள் first appeared on Madras Murasu.
]]>நவம்பர் 7 ஆம் தேதி அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா பார்த்தசாரதி வரவேற்றார்.
“திரைகடல் ஓடியும்” என்ற தலைப்பில் ஜப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் ஜப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப்படைத் தகவல்களைக் பகிர்ந்து கொண்டனர்.
ஜப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி பிரசன்னா பார்த்தசாரதி, கணேஷ் பாண்டியன் நமசிவாயம், குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை கண்மணி கோவிந்தசாமி, ராஜேஷ்குமார், கலைச்செல்வம், பொன்னி வளவன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், ஜப்பான் தமிழர்களின் பறையாட்டம், கும்மியாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் டோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ், இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்புகளை பற்றியும் விவரித்தார். Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளை குறித்து விவரித்தது. மேலும் தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்துடன் இணைந்து பணிபுரிய அமைச்சர் அன்பில் மகேஸிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த பயணம் குறித்து அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் கூறுகையில், ‘’மிகவும் அருமையான பயணம். நிறைய கற்றுக் கொண்டோம். மேல்படிப்பு மட்டுமல்லாது அங்குள்ள வேலைவாய்ப்புகளையும் தெரிந்து கொண்டோம். ஜப்பானிய மக்கள் எங்களோடு அன்புடன் நடந்து கொண்டனர். நான் முதல்வன் திட்டம் மூலம் ஜப்பானில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கும் கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.
The post ’’உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்..!’’ ஜப்பான் கல்விச் சுற்றுலா கொடுத்த புது அனுபவங்கள் first appeared on Madras Murasu.
]]>