Home அதிகம் வாசிக்கப்பட்டவை ’’உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்..!’’ ஜப்பான் கல்விச் சுற்றுலா கொடுத்த புது அனுபவங்கள்

’’உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்..!’’ ஜப்பான் கல்விச் சுற்றுலா கொடுத்த புது அனுபவங்கள்

0
’’உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்..!’’ ஜப்பான் கல்விச் சுற்றுலா கொடுத்த புது அனுபவங்கள்

தமிழக பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக ஜப்பான் பயணம் மேற்கொண்டனர். இவர்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றுள்ளார். ஜப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்.

நவம்பர் 7 ஆம் தேதி அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா பார்த்தசாரதி வரவேற்றார்.

“திரைகடல் ஓடியும்” என்ற தலைப்பில் ஜப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் ஜப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப்படைத் தகவல்களைக் பகிர்ந்து கொண்டனர்.

ஜப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி பிரசன்னா பார்த்தசாரதி, கணேஷ் பாண்டியன் நமசிவாயம், குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை கண்மணி கோவிந்தசாமி, ராஜேஷ்குமார், கலைச்செல்வம், பொன்னி வளவன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், ஜப்பான் தமிழர்களின் பறையாட்டம், கும்மியாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் டோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ், இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்புகளை பற்றியும் விவரித்தார். Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளை குறித்து விவரித்தது. மேலும் தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்துடன் இணைந்து பணிபுரிய  அமைச்சர் அன்பில் மகேஸிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த பயணம் குறித்து அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் கூறுகையில், ‘’மிகவும் அருமையான பயணம். நிறைய கற்றுக் கொண்டோம். மேல்படிப்பு மட்டுமல்லாது அங்குள்ள வேலைவாய்ப்புகளையும் தெரிந்து கொண்டோம். ஜப்பானிய மக்கள் எங்களோடு அன்புடன் நடந்து கொண்டனர். நான் முதல்வன் திட்டம் மூலம் ஜப்பானில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கும் கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here