Home செய்திகள் உலகம் ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம்

’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம்

0
’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம்

மலையகத் தமிழர் 200 

இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை.

*மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள்.

மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் இருந்து தொடங்­கு­கி­றது.

*இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. பின்­னர், ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­களது உற்­பத்­தி­யும் மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

*பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் -– காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின் தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் ஆவார்­கள்.

*இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

– – என்று அந்த மக்­க­ளின் மகத்­தான உழைப்­பைப் பாராட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“இத்­த­கைய மலை­யக மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.”என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஏனென்­றால் அம்­மக்­க­ளின் நிலைமை என்­பது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை. இலங்­கையை உயர்த்­திய, மேம்­ப­டுத்­திய அவர்­க­ளது வாழ்க்கை மேலும் முன்­னேற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக முதல்­வர் அவர்­கள் வலி­யு­றுத்தி இருந்­தார்.

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை, இலங்­கை­யில் நடை­பெ­றும் விழா­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்­டது ஆகும். இலங்­கை­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட மலை­ய­கத் தமி­ழர்­க­ளது 200 ஆவது ஆண்­டு­வி­ழாவை முன்­னிட்டு ஒரு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.“நாம் 200 – – ஒற்­றுமை, பன்­மு­கத்­தன்மை மற்­றும் பாரம்­பர்­யத்­தின் முழக்­கம்”என்­பது இந்த நிகழ்ச்­சி­யின் பெயர். இந்த நிகழ்ச்­சியை இலங்கை மலை­ய­கத் தமி­ழர்­க­ளுக்­காக இலங்­கை­யின் உள்­நாட்டு தோட்­டத் தொழில் துறை மற்­றும் அரசு தொழில் துறை அமைச்­ச­கம் முன்­னெ­டுத்­தது. அந்த விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­தால் தயா­ரிக்­கப்­பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழா­வில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில்,‘தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் உரையை ஒளி­ப­ரப்­பக் கூடாது என்று இந்­திய பா.ஜ.க. அரசு தடை போட்­டு­விட்­டது’என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை விட ஜன­நா­யக மறுப்பு, தமி­ழர் விரோ­தச் செய்கை இருக்க முடி­யாது.

முத­ல­மைச்­சர் உரை­யைத் தடை செய்­வ­தன் மூல­மாக, மலை­ய­கத் தமி­ழர்­கள் மீதான தி.மு.க.வின் பற்­று­தலை மறைக்­கும் சதிச் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளது.

இதே நிகழ்­வில் இன்­னொரு சதி­யை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளதை தமிழ்­நாடு நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

“அந்த விழா­வில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் முறை­யான அழைப்பு தமிழ்­நாடு அர­சிற்கு அனுப்­பப்­­ பட்டது. முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிகழ்­வில் கலந்து கொள்ள இய­லாத நிலை­யில், என்னை அந்த விழா­வில் கலந்து கொள்­ளு­மாறு அவர்­கள் பணித்­தி­ருந்­தார்­கள். இலங்கை பய­ணம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்­றிய அர­சின் வெளி­வி­வ­கா­ரத் துறை­யி­லி­ருந்து உரிய அனு­ம­தி­யினை பெறு­ வ­தற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழி­மு­றைப்­படி விண்­ணப்­பம் நம்­மு­டைய பொதுத்­து­றை­யால் அனுப்­பப்­பட்­டு­விட்­டது. political clearance என்று சொல்­லக்­கூ­டிய வெளி­வி­வ­கா­ரத்­தின் அனு­மதி கிடைப்­ப­தற்­காக நான் காத்­துக் கொண்­டி­ருந்­தேன்,

அக்­டோ­பர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறை­யின் வாயி­லாக ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பப்­பட்­டது. விழா நவம்­பர் 2-ஆம் தேதி மதி­யம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்­டரை மணி வரை வர­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து அனு­மதி இது­வரை வராத கார­ணத்­தால் நான் பய­ணத்தை மேற்­கொள்ள இய­லாத நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி, என்­னு­டைய பயண ஏற்­பா­டு­களை நான் இரத்து செய்­து­விட்டு வீடு திரும்­பி­னேன். அதற்­குப்­பி­றகு ஒன்­ப­தரை மணிக்கு மேல் அனு­மதி வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முன்­ன­தாக நான் பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்ட கார­ணத்­தி­னால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்­த­கைய அனு­மதி கிடைப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்­படி விழா ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் இதனை தெரி­வித்­து­விட்டு பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்­டோம்.”என்று சொல்லி இருக்­கி­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

வெளி­நாட்­டில் நடை­பெ­றும் விழா­வுக்கு அனு­மதி தரு­வ­தில் ஒன்­றிய அரசு எப்­படி நடந்து கொண்­டுள்­ளது என்­ப­தன் மூல­மாக – எத­னால் இப்­படி நடந்து கொண்­டது என்­ப­தை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­களை குடி­யு­ரிமை அற்­ற­வர்­க­ளாக ஆக்­கிய பா.ஜ.க., இப்­போது மலை­ய­கத் தமி­ழர்­கள் விழா­வில் எத்­த­கைய சதிச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றது என்­பது புரி­கி­றது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமி­ழர் மாநாட்­டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இலங்கை சென்­றி­ருக்­கி­றார்.

இன்­ன­மும் இந்­திய மீன­வர்­கள், படும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளிவைக்­கத் துப்பு இல்­லாத பா.ஜ.க. இலங்­கைக்­குப் போய் மலை­யக மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைப்­பது காலக் கொடு­மையே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here