Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

0
’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I)

பதவிகள்: இடர் பொறியாளர்கள் (Risk Engineers), ஆட்டோமொபைல் பொறியாளர்கள் (Automobile Engineers), கணக்குகள்(Accounts), சட்டம் (Legal), சுகாதாரம் (Health), தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் பொதுவாதிகள் (Generalists) போன்ற பல்வேறு துறைகளில் 450 பல்வேறு காலியிடங்களுடன் வந்துள்ளது.

கல்வித் தகுதி: இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள்

விண்ணப்பம் : ஆன்லைன் – www.newindia.co.in

மொத்த காலிப்பணியிடம்: 450

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 வயது. மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு (கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தை www.newindia.co.in பார்க்கவும்)

தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

மாத சம்பளம் : ரூ.80,000

விண்ணப்ப காலம்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை.

கட்டணம்: SC/ST/PWD – Rs. 100. General/EWS/OBC – Rs. 750.

அதிகாரப்பூர்வ இணையதளம் & ஆன்லைன் விண்ணப்பம்: https://www.newindia.co.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here