Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ”மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் வேலை..!” ஆண் – பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

”மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் வேலை..!” ஆண் – பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

0
”மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் வேலை..!” ஆண் – பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP), மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை, (Central Armed Police Forces (ACs) Examination, 2023) யு.பி.எஸ்.சி நடத்துகிறது.

அதன்படி, 2023 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Border Security Force (BSF) – 86, Central Reserve Police Force (CRPF) -55, Central Industrial Security Force(CISF) -91, Indo-Tibetan Border Police (ITBP) – 60 and Sashastra Seema Bal (SSB) – 30 என்று மொத்தம் 332  ASSISTANT COMMANDANTS  இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 16.05.2023 வரை  https://www.upsc.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  அனைத்து வகுப்பைச்  சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.200 தேர்வுக்  கட்டணத்தை கட்டாயாமாக செலுத்த வேண்டும்.  எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்டங்களாக தேர்வு முறை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here