spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு''மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் வேலை..!'' ஆண் - பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    ”மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் வேலை..!” ஆண் – பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆண் - பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP), மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை, (Central Armed Police Forces (ACs) Examination, 2023) யு.பி.எஸ்.சி நடத்துகிறது.

    அதன்படி, 2023 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Border Security Force (BSF) – 86, Central Reserve Police Force (CRPF) -55, Central Industrial Security Force(CISF) -91, Indo-Tibetan Border Police (ITBP) – 60 and Sashastra Seema Bal (SSB) – 30 என்று மொத்தம் 332  ASSISTANT COMMANDANTS  இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 16.05.2023 வரை  https://www.upsc.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  அனைத்து வகுப்பைச்  சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.

    ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.200 தேர்வுக்  கட்டணத்தை கட்டாயாமாக செலுத்த வேண்டும்.  எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்டங்களாக தேர்வு முறை இருக்கும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments