Home Uncategorized ‘’தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல்..!’’ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு

‘’தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல்..!’’ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு

0
‘’தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல்..!’’  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும்) விதிகள், 1997-இல் விதி-4-ன்படி, தகுதியுள்ள முத்தவல்லிகளின் பட்டியல் பெறப்பட்டு, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு மேற்கண்ட வகை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட முத்தவல்லிகளுக்கான தேர்தல் குறித்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் 03.07.2023 அன்று தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துதல்) விதிகள் 1997-இல் விதி 5-ன்படி கீழ்க்காணும் இடங்களிலுள்ள அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்படவுள்ளது:-

1.தேர்தல் அதிகாரி/ ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அலுவலகம், சேப்பாக்கம், சென்னை-600 005.

2. முதன்மைச் செயல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், எண்.1, ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001.

3. அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களின்
அலுவலகங்கள் (11 மண்டலங்கள்).

4. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்,சென்னை-9-ன் அதிகாரபூர்வ வலைதளம்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேரத் தகுதியுள்ள எந்தவொரு நபராவது தங்களின் பெயர் சேர்க்கப்படுவது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பான ஆட்சேபணை மனுக்களை இவ்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அதாவது 10.07.2023 மாலை 3.00 மணி வரை தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும்) விதிகள், 1997-இல் விதி-6-ன்படி, தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்படி ஆட்சேபணை மனுக்களை ஆய்வு செய்து தேர்தல் அதிகாரியால் ஆணைகள் வெளியிடப்பட்டு அவை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை தேர்தல் அதிகாரியால் தமிழ்நாடு அரசிதழில் விரைவில் தனியே வெளியிடப்படும் என்று ( தேர்தல் அதிகாரி / ஆணையர்) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here