Home விளையாட்டு உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான்: கடந்து வந்த பாதை..

உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான்: கடந்து வந்த பாதை..

0
உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான்: கடந்து வந்த பாதை..

50 ஓவர் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக்கொள்வது இது 8-வது முறை. இதற்கு முன்பு 1992, 1996, 1999, 2003, 2011, 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைப் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. 2007 உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்குநேர் விளையாடவில்லை.
50 ஓவர் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி முதல் வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசியாக 2019-ல் ஓல்ட் ட்ராஃபோர்டில் இரு அணிகளும் விளையாடின. அப்போது முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் மிரட்டலான சதத்தால் 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 212 ரன்கள் மட்டுமே எடுத்து டக்வர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாகக் கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மெல்போர்னில் விளையாடின. கடைசிப் பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெல்போரன் மைதானமே நிரம்பிவழிந்து ஆஸ்திரேலியாவை அதிரவைத்தது. எனவே, அஹமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திலும் மைதானம் நிரம்பிவழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 1,32,000.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here