50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறுகிறது. 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் மொத்தம் 5 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னை ஆட்டங்களின் அட்டவணை:
இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8
நியூசிலாந்து vs வங்கதேசம், அக்டோபர் 14
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 18
பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 23
பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா, அக்டோபர் 27

