Madras Murasu

மொத்த விற்பனை விலைக் குறியீடு..! மாதாந்திர மதிப்பீடுகள் வெளியானது

மொத்த விற்பனை விலைக் குறியீடு, உற்பத்தியாளர் விலைக் குறியீடு உள்ளிட்ட பல்வேறு தரவுகள் சார்ந்த ஜூலை மாதத்திற்கான தற்காலிக மதிப்பீடுகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீடுகள் 2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டின்படி, அகில இந்திய மொத்த விற்பனை விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தக் குறியீடு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.91 சதவீதம் கூடுதலாகும். இதேபோன்று அனைத்து வகையான பொருட்களுக்கான மொத்த விற்பனை விலைக் குறியீடு 110-ஆக உள்ளது.

14

எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் போன்ற முக்கியப் பொருட்களுக்கான வருடாந்திர பணவீக்க விகிதம் முறையே 8.52, 20.05, 8.29, சதவீதமாக உள்ளது. உணவுப் பொருட்களுக்கான, மொத்த விற்பனை விலைக் குறியீடு 6.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.14 சதவீதமாகும். அனைத்துப் பொருட்களுக்கான மாதாந்திர விலைக் குறியீட்டு எண் விகிதம் தொடர்பான விரிவான விகிதங்களையும் மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Scroll to Top