Madras Murasu

ccpa

விமான முன்பதிவு தளத்தில் வாடிக்கையாளர் விருப்பமின்றி விளம்பரங்கள்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ₹1 லட்சம் அபராதம்

விமான முன்பதிவு தளத்தில் வாடிக்கையாளர் விருப்பமின்றி விளம்பரங்கள்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ₹1 லட்சம் அபராதம்

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சிசிபிஏ (CCPA) , ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் நிறுவனம் தனது விமான முன்பதிவு தளத்தில் ‘ டார்க் பேட்டர்ன்ஸ்’ எனப் பொதுவாக அறியப்படும் ஏமாற்றும் வடிவமைப்பு நடைமுறைகளைக் கையாண்டதற்காக ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

சிசிபிஏ கண்டுபிடித்தவை:

* முன்பே டிக் செய்யப்பட்ட செக்பாக்ஸ் மூலம் நுகர்வோர் ஸ்பைஸ் கிளப் லாயல்டி திட்டத்தில் தானாகவே சேர்க்கப்பட்டனர் .

* நுகர்வோர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலேயே, இயல்புநிலை விருப்பம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால், அவர்கள் விளம்பரச் செய்திகளைப் பெற ஒப்புக்கொண்டதாகவும் கருதப்பட்டனர்.

சிசிபிஏ அறிவிப்பு வெளியிட்ட பிறகும், அந்த நிறுவனம், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மின்னஞ்சல் வழியாக வரும் எதிர்கால செய்திகளுக்காக, முந்தைய முறையை மாற்றி, முன்பே டிக் செய்யப்பட்ட மற்றொரு செக்பாக்ஸை வைத்ததன் மூலம், அதே நடைமுறையை வேறு வடிவத்தில் தொடர்ந்தது.

விசாரணையின் போது, தொழில்நுட்பப் பிழை காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது. தேவையான திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், அவை தொடரும் என்றும் உறுதிப்படுத்தும் ஒரு உறுதிமொழியை வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட்டின் முன்பதிவுத் தளத்தில் உள்ள விரும்பத்தகாத போக்குகளை சிசிபிஏ சுட்டிக்காட்டியது.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், டிஜிட்டல் தளங்கள் நியாயமான, வெளிப்படையான, நுகர்வோரை மையமாகக் கொண்ட முறையில் வணிகம் செய்வதை உறுதி செய்வதற்கும் சிசிபிஏ தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

Scroll to Top