Home செய்திகள் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் அண்ணாமலை..!’’ தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டுதல்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் அண்ணாமலை..!’’ தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டுதல்

0
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் அண்ணாமலை..!’’ தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டுதல்

‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற கோஷத்துடன் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை அப்போது அண்ணாமலை சொல்லி வருகிறார்.

இந்நிலையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்திற்குச் கட்சியினர் புடைசூழ சென்றார். கோவிலை சுற்றி வந்து மாதாவை வணங்கினார். மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார். கோவிலுக்குள் சென்று பக்தி பரவசத்துடன் சிறிது நேரம் அமைதியாக நின்றபடி மாதாவிடம் வேண்டிக் கொண்டார். அண்ணாமலைக்கு கோவில் அருட்தந்தை ஆசிர்வாதம் செய்தார்.

மாதா பேரயலம் சென்றது குறித்து, அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில், ‘’ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் காலத்து வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பேராலயமான இது. சுமார் 450 ஆண்டுகள் பழமையானது.  தூத்துக்குடியின் முதல் மாதா ஆலயமாகவும், தமிழகத்தில் உள்ள பேராலயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

மதங்கள் தாண்டி, மக்கள் அனைவரும் வழிபடும் சிறப்பு மிக்க பனிமய மாதா பேராலயத்தில், வழிபடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டிக்கொண்டேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை, மாதா கோவிலுக்கு வந்த தகவல் சட்டென தூத்துக்குடியில் பரவியது. இதையடுத்து, அவரை பார்க்க மாதா கோவில் முன்பு ஏராளமானோர் திரண்டனர். அவர்களிடம் அண்ணாமலை பேசினார். சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர். சிலர் குருப் போட்டோ எடுத்தனர். மதா கோவிலில் அண்ணாமலை இருந்த நேரம், அப்பகுதி சற்று பரபரப்புடன் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here