Home Uncategorized ”ஒரு சொட்டு மது இல்லா தமிழ்நாடு..!” தமிழக வாழ்வுரிமைக் கட்சி

”ஒரு சொட்டு மது இல்லா தமிழ்நாடு..!” தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0
”ஒரு சொட்டு மது இல்லா தமிழ்நாடு..!” தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டம்,மரக்காணத்தையடுத்த எக்கியார் குப்பத்தைச்சேந்த 9 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரைச் சேர்ந்த 4 பேரும் அடுத்தடுத்து இறந்திருப்பது மிகுந்த அதிர்ச்சிளிக்கிறது,அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆறுதல் கூறியது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி அளித்தது,சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணி நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது என அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆறுதலை தருகிறது.
தமிழ்நாடு அரசு இத்தோடு நின்று விடாமல் கள்ளச்சாராயமோ நல்ல சாராயமே அது எதுவாக இருந்தாலும் ஒரு சொட்டு மது இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி நகர வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here