தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கான டிசம்பர் 2026 ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு 25.11.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள அரசு ஊழியர்கள் இணையவழி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 15.12.2026 இரவு 11.59 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஜனவரி 31, 2027 முதல் பிப்ரவரி 8, 2027 வரை நடைபெற உள்ளன. கணினி வழியிலான கொள்குறி வகைத் தேர்வுகள் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை ஐந்து நாட்களில் 10 அமர்வுகளாக நடைபெறும். விரிவான விடையளிக்கும் வகைத் தேர்வுகள் பிப்ரவரி 5 முதல் 8 வரை நான்கு நாட்களில் 8 அமர்வுகளாக நடைபெற உள்ளன.
தேர்வுகள் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும். தேர்வுகளுக்கு ஏற்ப நேரம் மாறுபடலாம்.
விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.30 மற்றும் ஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். அனைத்து கட்டணங்களும் இணையவழியில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
அரசுப் பணியாளர்கள் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து, தேர்வுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
https://www.tnpsc.gov.in/
