நாடு முழுவதும் உள்ள AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளில் (MBA) மாணவர் சேர்க்கைக்கான Common Management Admission Test (CMAT) 2027 நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இத்தேர்வு, 2027–2028 கல்வியாண்டிற்கான மேலாண்மைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு உதவும் வகையில் கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் Quantitative Techniques and Data Interpretation, Logical Reasoning, Language Comprehension, General Awareness, Innovation and Entrepreneurship ஆகிய ஐந்து பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
CMAT 2027 – முக்கியத் தேதிகள்
| நிகழ்வு | தேதி |
|---|---|
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | 23.11.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 20.12.2026 |
| விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் | 21.12.2026 |
| தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பம் | டிச. 22–25, 2026 |
| தாமதக் கட்டணம் | ₹500 |
| விண்ணப்பத் திருத்தம் | டிச. 26–28, 2026 |
| தேர்வு நகரம் அறிவிப்பு | 21.01.2027 |
| நுழைவுச்சீட்டு வெளியீடு | 04.02.2027 |
| CMAT நுழைவுத் தேர்வு | 11.02.2027 |
| விடைக்குறிப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட பதில்கள் | பிப். 19–21, 2027 |
| தேர்வு முடிவு | 25.02.2027 |
தேர்வு விவரங்கள்
-
தேர்வு முறை: கணினி வழித் தேர்வு (CBT)
-
தேர்வு நேரம்: 3 மணி நேரம் (180 நிமிடங்கள்)
-
தேர்வு மொழி: ஆங்கிலம் மட்டும்
-
தேர்வு மையம், தேதி, நேரம் ஆகியவை நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு இளங்கலை மாணவர்களும், 2027–28 கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்பாகத் தங்களது தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்
| விண்ணப்பதாரர் பிரிவு | ஆண்கள் | பெண்கள் |
|---|---|---|
| பொதுப்பிரிவு (General) | ₹2,500 | ₹1,250 |
| EWS / SC / ST / PwD / OBC-NCL | ₹1,250 | ₹1,250 |
| மூன்றாம் பாலினத்தவர் | ₹1,250 | ₹1,250 |
வங்கிச் சேவைக் கட்டணம் மற்றும் GST கூடுதலாக வசூலிக்கப்படலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
-
https://cmat.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
-
CMAT 2027 விண்ணப்பப் பதிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
-
தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதிகளைப் பதிவு செய்ய வேண்டும்.
-
தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
-
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்புக்கு:
-
இணையதளம்: https://cmat.nta.nic.in
-
NTA: https://nta.ac.in
-
தொலைபேசி: 011-40759000 / 011-69227700
-
மின்னஞ்சல்: cmat@nta.ac.in
மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை: எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நேரத் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.
