Madras Murasu

பதிப்பகம் தொடங்கும் எழுத்தாளர் சங்கம் புத்தகம் வெளியிடுகிறது

உலகெங்கிலும் வளரும் புதிய எழுத்தாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அறிமுகம் செய்ய எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 

பேசப்பட வேண்டிய, மக்களுக்கான புத்தகங்களாக இருக்கும் பட்சத்தில், அந்த எழுத்தாளர்களுக்கான பொற்காலத்தை துவக்கி வைக்க, அவர்களின் முகவரியாக நின்று படைப்புகளை வெளியிட எழுத்தாளர்கள் சங்கம் முன்வருகிறது.

கதைகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் எந்தப் புத்தகமாக இருந்தாலும் சிறந்த படைப்பாக, போற்றத்தக்கதாக, சங்கம் வெளியிடுவதற்கான தகுதியுடன் இருக்கவேண்டும்.

நாமே அச்சிட்டு, நாமே வெளியிடுகிறோம்.

உங்கள் படைப்புகளை உடனடியாக அனுப்புங்கள்.
தேர்வுக்குழு முடிவு செய்யும் .

தேர்வுக்குழு :

எழுத்தாளர்கள்
திரு,. பட்டுக்கோட்டை பிரபாகர்,
திரு. பாஸ்கர் சக்தி,
திரு. சேரன்
திரு. சமுத்திரக்கனி
திரு. அஜயன்பாலா

கவிஞர்கள்
திரு. சினேகன்,
திருமதி. தாமரை,
திரு. பழனிபாரதி.

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் (SWA)

Scroll to Top