Madras Murasu

திருச்செந்தூர் – கால்டுவெல் சொல்லும் வரலாறு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டியின் முக்கிய திருவிழாவான சூரசம்காரம் நாளை (15.11.2026) நடைபெறுகிறது.
திருச்செந்தூர் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெறும் இந்த யாகசாலை வள்ளி, தெய்வயானை சன்னதிக்கு நடுவில் அமைந்துள்ளது.
பக்தர்கள் இதனை பார்ப்பதற்கு வசதியாக வெளியே நடத்தலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் மூலவருக்கு பூஜை செய்யும் உரிமை உள்ள போத்திகள் (கேரள நம்பூதிரிகள்) அதனை ஏற்கவில்லை.
அந்த காலத்தில் பக்தர்கள் கூட்டமும் அதிகம் இருக்காது பாதுகாப்பும் அதிகம் இருக்காது இதை பயன்படுத்தி மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கருவறைக்குள் சென்று மூலவர் சிலையை கட்டிப்பிடித்து அசைக்க அது கீழே விழுந்து உடைந்து விட்டது.
எனவே புதிய சிலை செய்து மூல வரை வைத்தனர்.
உடைந்த சிலையை இப்போது யாகசாலை பூஜை நடைபெறும் பகுதியில் புதைத்து விட்டார்கள்.
புதிதாக வைத்த சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு கால் பகுதியில் லேசான சேதம் அடைந்ததாகவும் அதையும் அகற்ற வேண்டும் என்று கூறிய போது போத்திகள் பிரசன்னம் பார்த்து அதே சிலை நீடிக்கலாம் என்று கூறி விட்டனர்.
ஆனால் சேதமடைந்த பகுதியில் தங்க கால் செய்து வைக்கப்பட்டுள்ளது. என்று திருச்செந்தூரை சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் கூறினார்.
கந்தசஷ்டி முடிந்த மறுநாள் முருகனுக்கும் தெய்வயானைக்கும் திருமணம் நடைபெறும்.
தெய்வயானை பரதர் சமூகத்தை சேர்ந்தவர் எனவே முருகன் எங்களுக்கு மச்சான் முறை என்று பரத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
முன்பு 7 கடற்கரை ஊர் பகுதியைச் சேர்ந்த பரதவர்கள் தான் திருச்செந்தூர் முருகன் தேரை இழுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.
திருச்செந்தூர் கடலோரப் பகுதியில் உள்ள பரதர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே வெள்ளையர் ஆட்சிக்கு முன்பு வந்த போர்ச்சுகீசியர் ஆட்சியில் இந்த பகுதியில் இருந்த இஸ்லாமிய மன்னர் கெடுபிடி தாங்காமல் கத்தோலிக்க மதத்தை தழுவினர்.
20 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மதம் மாறியதாக கால்டுவெல் தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
– குமார் ராமசாமி ஆதித்தன்
Scroll to Top