Madras Murasu

JEE MAIN 2027 தேர்வு! ஜனவரி 20 முதல் தேர்வு – நவம்பர் 22 கடைசி நாள்!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி அல்லாத முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் (JEE Main 2027) நுழைவுத் தேர்வுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் தற்போது பிளஸ் 2 படித்து வருபவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

2025, 2026 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 2027-ல் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு இயற்பியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடத்தகுதிகள் அவசியம். பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் படிப்புகளுக்கு தனித்தனி பாடத்தகுதிகள் உள்ளன.

விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வு நடைபெறும் தேதி:

முதல் அமர்வு (Session 1) தேர்வு 2027 ஜனவரி 20, 21, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இரண்டாவது அமர்வு (Session 2) தேர்வு ஏப்ரல் 2 முதல் 7 வரை நடைபெறும்.

கணினி வழியில் (CBT) தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பம் தொடங்கிய நாள்: 24.10.2026.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2026 (இரவு 11.50 மணி).

தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க: நவம்பர் 23 முதல் 26 வரை.

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய: நவம்பர் 27 முதல் 29 வரை.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு ஆண்கள் – ரூ.1,000; பெண்கள் – ரூ.800.

ஓபிசி-என்சிஎல் / இ.டபிள்யூ.எஸ். ஆண்கள் – ரூ.900; பெண்கள் – ரூ.800.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.500.

முக்கிய இணையதளம்:

https://jeemain.nta.nic.in/

மாணவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு கட்டணம் செலுத்தி உறுதிப்படுத்தல் பக்கத்தை (Confirmation Page) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய தேதிகள் ஒரே பார்வையில்

விவரம் தேதி
விண்ணப்பக் கடைசி நாள் 22.11.2026
தாமதக் கட்டண விண்ணப்பம் 23–26.11.2026
தேர்வு நகர அறிவிப்பு 30.12.2026
ஹால் டிக்கெட் 13.01.2027
முதல் அமர்வுத் தேர்வு 20–28.01.2027
Scroll to Top