இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்களில் 1,393 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் (ASRB) சார்பில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதற்கான ஒருங்கிணைந்த தேர்வு 2026 (Centralized Combined Examination 2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் 1,393 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- Technical Assistant (T-3) – 1,254 இடங்கள்.
- Senior Technical Assistant (T-4) – 139 இடங்கள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், உணவு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சில பொறியியல் பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக். அல்லது சம்பந்தப்பட்ட துறையில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பணிப்பிரிவுக்குமான தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்க வேண்டும்.
வயது வரம்பு:
17.12.2026 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. விதிகளின்படி மற்ற பிரிவினருக்கும் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் தேதி:
- விண்ணப்பம் தொடக்கம்: 18.11.2026
- கடைசி நாள்: 17.12.2026 (இரவு 11.59 மணி)
- திருத்தம் செய்யும் காலம்: 18.12.2026 முதல் 20.12.2026 வரை.
தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு (Preliminary CBT), முதன்மைத் தேர்வு (Mains CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது.
தேர்வு நாள்: முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 2027-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான தேதி பின்னர் வெளியிடப்படும். முதன்மைத் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://asrb.gov.in/
தகுதியுள்ள பட்டதாரிகள் அறிவிப்பை முழுமையாகப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
