Madras Murasu

அயல்நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி! மாதம் ரூ.1.25 லட்சம் உடனே விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் மொழியையும், தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டையும் கற்பிக்கும் வகையில், அயல்நாடுகளில் தற்காலிகத் தமிழ் ஆசிரியர்களைப் பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், தமிழிணையக் கல்விக்கழகம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணை 24.11.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

கம்போடியா, இந்தோனேசியா, மலாவி, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, மொரீஷியஸ், ரீயூனியன், குவாடலூப், மார்டினிக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழ் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியுள்ளன.

தகுதிகள் என்ன?

  • குறைந்தபட்சம் 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

  • தமிழ் மொழியில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

  • ஆங்கிலத்தில் நன்கு எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • தகுதியும் திறமையும் வாய்ந்த தமிழ் ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.

ஊதியம் மற்றும் பணி விவரங்கள்

தேர்வு செய்யப்படும் தமிழ் ஆசிரியர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதந்தோறும் ரூ.1,25,000 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

பணியில் சேருவதற்கும், ஒப்பந்தப் பணி முடிந்து திரும்புவதற்குமான ஒருமுறை போக்குவரத்துச் செலவு, விசா செலவு உள்ளிட்ட தொடர்புடைய செலவுகளை அரசுத் துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் தங்களது முழுமையான விண்ணப்பம் மற்றும் சுயவிவரக் குறிப்பை (Resume) தமிழிணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இணையதளம்: https://www.tamilvu.org

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
கோட்டூர், சென்னை – 600025.

கடைசி நாள்: 30.11.2026

மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும்.

தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உலகெங்கும் கொண்டு செல்லும் வாய்ப்பாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

Scroll to Top