MBBS சீட்டுகளுக்கு வந்தது ‘Clearance Sale’! 40% வரை கல்விக் கட்டணத்தைக் குறைக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்!
மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான MBBS இடங்கள் காலியாக உள்ளன. அதிகப்படியான கல்விக் கட்டணமே இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு MBBS சேர்க்கையில் ஒரு வித்தியாசமான சூழல் உருவாகியுள்ளது. மூன்றாவது சுற்று மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகும் நாடு முழுவதும் சுமார் 3,426 MBBS இடங்கள் காலியாக உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளன. மருத்துவக் கல்வியில் இதுவரை இல்லாத வகையில், மாணவர்களைத் தேடி கல்லூரிகளே கட்டணத்தைக் குறைத்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மருத்துவக் கல்லூரிகள்; எட்ட முடியாத கல்விக் கட்டணம்!
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் MBBS இடங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் புதிதாக 13,836 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், இந்தப் புதிய இடங்களில் பெரும்பாலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பதற்கான கட்டணம் மட்டுமல்லாமல், Hostel, Mess மற்றும் இதர செலவுகளையும் சேர்த்துப் பார்த்தால் ஆண்டுக்கு சுமார் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
முழுமையான மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு சுமார் 1.25 கோடி ரூபாய் வரை செலவாகும் சூழல் உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பு மூன்று ஆண்டு. ஆண்டுக்கு சராசரியாக 75 லட்சம் கட்டணம் என்று நிர்ணயித்துள்ளார்கள். அங்கேயும் முதல் ரவுண்டில் தேர்வு செய்த பல மாணவர்கள் சேரவில்லை. அங்கேயும் கட்டண சலுகையை ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் Lower Middle Class மற்றும் Middle Class குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் மருத்துவக் கல்வியைத் தொடர்வது பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது.

40% கட்டணக் குறைப்பு: மாணவர்களுக்காகவா, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காகவா?
மாணவர் சேர்க்கை குறைந்து காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டணத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு Deemed University-யில் ஆண்டுக் கட்டணம் 25 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 40 சதவீதக் குறைப்பாகும்.
இதன் மூலம் நான்கரை ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில், 80 லட்சம் ரூபாய்க்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
சில கல்லூரிகள் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக Admission Agents மற்றும் Counselling நிறுவனங்களின் உதவியையும் நாடத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், Undergraduate Medical Education-க்காகவே பெரிய அளவில் வங்கிக் கடன் வாங்க குடும்பங்கள் தயங்குகின்றன. ஏனெனில் MBBS முடித்த பிறகு PG Medical Education-க்கும் மிகப்பெரிய தொகையைச் செலவிட வேண்டியிருக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பு முதல் ரவுண்டில் தேர்வு செய்த பல மாணவர்கள் சேரவில்லை. அங்கேயும் கட்டண சலுகையை ஆரம்பித்து விட்டார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்புகின்றன; தனியார் கல்லூரிகளில்தான் காலியிடங்கள்!
இந்தச் செய்தியில் குறிப்பிடப்படும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. காலியாக இருக்கும் இடங்களில் பெரும்பாலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவை (நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் – Deemed Universities ).
இதனால் மருத்துவக் கல்விக்கான கட்டண நிர்ணய முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
NEET தேர்வில் தகுதி பெறுவதற்கான Cut-off மதிப்பெண்ணைக் குறைப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது. ஏற்கெனவே லட்சக்கணக்கான மாணவர்கள் NEET தேர்வில் தகுதி பெறும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்பதுதான் உண்மையான பிரச்சினை.
இந்த அவலநிலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இல்லை. கட்டணமும் ஒரளவுக்கு கட்டுபாட்டுக்குள் உள்ளது. மேலே சொன்ன இந்த அவல நிலை, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் மருத்துவக் கல்லூரிகளில்தான் உள்ளது.
’’நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு மருத்துவக் கல்வி கட்டணங்களை நிர்ணயிப்பது யார்? கண்காணிப்பது யார்? கல்வி கட்டணத்தைக் கூட்டுவதும் , திடீரென்று குறைப்பதும் யார்? மத்திய அரசின் மெடிக்கல் கவுன்சலிங் கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது.’’
கட்டணம் குறைவு வாருங்கள் என்று கூவி கூவி விற்கிறார்கள். பெட்டிக்கடை போல மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் கூட இல்லாத மருத்துவக் கல்லூரிகள், கட்டிமுடிக்கப்பதாக இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரிகளை சென்னையின் சுற்று வட்டாதரத்தில் காணலாம்.
கர்நாடகாவிலும் இதே நிலை!
கர்நாடக மாநிலத்தில் 78 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 61 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதாகச் செய்தி குறிப்பிடுகிறது.
மொத்தம் 15,746 MBBS இடங்கள் உள்ள நிலையில், 191 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக இத்தகைய காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
கர்நாடகாவில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு ஏழு சுற்றுகளாக நடத்தப்பட்டுள்ளது. இத்தனை சுற்றுகளாகக் கலந்தாய்வு நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
2026–27 நீட் மருத்துவக் கலந்தாய்வில் நான்கு சுற்றுகள் முடிந்த பிறகும் தமிழக மற்றும் புதுச்சேரி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஏராளமான எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
சமீபத்திய செய்தி அறிக்கையின்படி:
-
தமிழ்நாடு – 686 இடங்கள்
-
புதுச்சேரி – 186 இடங்கள்
-
மொத்தம் – 872 இடங்கள்
நாடு முழுவதும் நீட் 2026 மருத்துவக் கலந்தாய்வின் சிறப்புக் காலியிடச் சுற்றில் 920 இடங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ளன.
