Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ”ரயில்வேயில் 9,144 காலிப்பணியிடம்..!” டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

”ரயில்வேயில் 9,144 காலிப்பணியிடம்..!” டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
”ரயில்வேயில் 9,144 காலிப்பணியிடம்..!” டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் ரயில்வே தொழில்நுட்ப்ப பிரிவுகளில் காலியாக உள்ள 9,144 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்தவர்கள் மார்ச் 9 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வேயில் டெக்னீசியன் கிரேட் – I சிக்னல் பணியில் காலியாக உள்ள 1092 இடங்களுக்கும், டெக்னீசியன் கிரேட் – II – பிரிவில் காலியாக உள்ள 8052 இடங்களுக்குமான பணி நியமனம் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது.

’டெக்னீசியன் கிரேட் – I’ சிக்னல் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் வயது 18 முதல் 36 -க்குள் இருக்க வேண்டும். டெக்னீசியன் கிரேட் – II பணிக்கு விண்ணப்பிப்போர் வயது 18 முதல் 33 -க்குள் இருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓ.பி.சி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள் என்றால் குறைந்தது 3 வயது முதல் அதிகபட்சம் 8 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்படும். ரயில்வேயில் குரூப் சி, குரூப் டி பிரிவில் 3 ஆண்டு பணி முடித்தவர்கள் என்றால் 40 வயது முதல் 45 வயது வரையும் வயது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

’டெக்னீசியன் கிரேட் – I’ சிக்னல் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ அல்லது என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

’டெக்னீசியன் கிரேட் – II’ பணிக்கு ஐ.டி.ஐ-யில் பிட்டர், மெக்கானிக், எலக்ட்ரிசீயன், எலக்ட்ரானிக்ஸ், வயர்மேன், மெஷினிஸ்ட் உள்பட பிற மெக்கானிக் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்,சி,, எஸ்.டி,, முன்னாள் படை வீரர்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்றால் விண்ணப்ப கட்டணம் ரூ.250 செலுத்தினால் போதும். இதுதவிர மற்றவர்கள், விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், மார்ச் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை www.rrbchennai.gov.in எனும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ரயில்வே துறையில் இது மெகா வேலை வாய்ப்பு. லேட் பண்ணானல், உடனே விண்ணப்பித்து இப்போதே எழுத்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

வேலைவாய்ப்பு அறிவிக்கை முழு விபரம் RRB_TECHNICIAN_Detailed Notification_CEN_02_2024 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here