சேலம் மாநகராட்சி 34- வது கோட்டம் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ அறிக்கை:
தமிழகத்தில் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை போற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகளை, முதல்வர் அறிவித்த நாளில் இருந்து இடைவிடாமல் சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் செய்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாகவும் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வாகவும் , புதிய ஆக்கப்பூர்வ முயற்சியாகவும் 34-வது கோட்டத்தில் 10-06-2023 சனிக்கிழமை காலை 7-30 மணிக்கு எண்-2 புதுத்தெரு புதிய சாலையில் இருந்து, அக்கோட்ட மாமன்ற உறுப்பினரான நான் , சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாக சென்று, முதல் கட்டமாக 500- வீடுகளுக்கு தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சள் பை திட்டப்படி, எப்போதும் கையில் எடுத்து செல்லும் வகையில் வீட்டிற்கு ஒரு புதிய மஞ்சள் பை வழங்குகிறோம்.

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தர அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வீட்டிற்கு ஒரு ஒரு ஆவின் பால் பாக்கெட்டும் வழங்கி திடக்கழிவு மேலான்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்க்கொள்ள உள்ளோம்.
இந்த பிரச்சார நிகழ்வில் கொக்கலிக்கட்டை நாட்டுப்புறகலைஞர்கள் மூலம் 8-அடி உயர பிரமாண்ட மஞ்சள் பைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம்.
சுற்றுச்சுழலை காக்க, திடக்கழிவு மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தி, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தெருவில் உள்ள அனைத்து வீட்டினரையும் “எனது குப்பை எனது பொறுப்பு” நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் இனணந்து செயல் பட வைக்கும் ஒரு அருமையான சுகாதாரமிகு தூய்மையான சூழலை எங்கள் கோட்டத்தில் ஏற்படுத்தும் முயற்சியில் எங்களுக்கு உதவிடும் வகையில், தாங்களும் நாளை காலை 7-30 மணி முதல் நடக்க உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் வேண்டுகின்றேன்.
இவ்வாறு 34-வது கோட்டம், மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ கூறியுள்ளார்

