தமிழ்நாடு அரசில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருத்துவ பணிகள் துறையில் பார்மஸிஸ்ட் எனப்படும் மருந்தாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசின் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதோடு இ.சி.ஜி டெக்னிசியன் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. உரிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சுகாதார பணிகள் துறையில் சித்தா மருத்துவத்துறையில் சித்தா மருந்தாளர் பணிக்கு 26 பேரும் யுனானி மருந்தாளர், ஆயுர்வேதா மருந்தாளர் ஆகிய பணிகளுக்கு தலா ஓர் இடத்துக்கும் ஆள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இந்த வேலைக்கு Diploma in Indian System of Medicine அல்லது Diploma in Pharmacy in Siddha அல்லது Diploma in Integrated Pharmacy படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
மேலும், EEG Technician 10 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல் அல்லது விலங்கியல் பாடத்தை எடுத்துப் படித்து 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், பயாலஜி பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். அத்துடன், மத்திய மாநில அரசுகளால் அங்கிகரிக்கப்பட்ட ஓர் ஆண்டு EEG அல்லது EMG படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
இந்த ஆட்சேர்க்கைக்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்காணல் எனப்படும் Interview கிடையாது. 10 ஆம் வகுப்பு மார்க், 12 ஆம் வகுப்பு மார்க், மருந்தாளர் – இசிஜி தொழில்நுட்ப படிப்புகளின் மார்க் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு விதிகளின் படி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். அதுபோல, உச்சபட்ச வயது வரம்புகளிலும் தளர்வுகள் உண்டு. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான அறிவிப்பினையும் ஆன்லைனில் விண்ணப்பம் போடவும் https://www.mrb.tn.gov.in என்ற இணையத்தை பார்க்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணத்தாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி டிசம்பர் 18.

