மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 18-ந் தேதி ஒலிபரப்பாக உள்ளது. அந்த, மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மக்களிடமிருந்து உள்ளீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. உங்களது உள்ளீடுகளை வரவேற்பது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாகும். உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை நமோ செயலி, மை கவ் அல்லது 1800117800 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது செய்தியை பதிவு செய்யலாம்.

