Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’மத்திய அரசு வேலை 1558; ஜுலை 21 ம் தேதி கடைசி நாள்..!’’ 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

’’மத்திய அரசு வேலை 1558; ஜுலை 21 ம் தேதி கடைசி நாள்..!’’ 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
’’மத்திய அரசு வேலை 1558; ஜுலை 21 ம் தேதி கடைசி நாள்..!’’ 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு எஸ்.எஸ்.சி என்று அழைக்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வினை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதன்படி, 10-ம் வகுப்பு தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்ப இருக்கிறது. தகுதியுள்ளோர் ஜுலை 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி: பன்முக உதவியாளர், ஹவால்தார்,

காலியிடம்:

பன்முக உதவியாளர் Multi-Tasking (Non-Technical) Staff: 1198
ஹவால்தார் : ( Havaldar in CBIC and CBN) 360

Multi-Tasking Staff Havaldar at the Central Board of Indirect Taxes and Customs (CBIC) and the Central Bureau of Narcotics (CBN)


கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு

வயது: 01.08.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்தப் பணிக்கு கணினி வழித் தேர்வு நடக்கும். கொள்குறிவகை. பொது ஆங்கிலம், பொது அறிவு பகுதிகளில் தலா 25 வினாக்கள் கேட்க்கப்படும். திறனறிதல், கணிதம் ஆகிய பிரிவுகளில் தலா 20 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 90 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் 3 மதிப்பெண்.

ஹவால்தார் பணிக்கு உடற்தகுதி தேர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணி இடங்களுக்கு https://ssc.nic.in/ என்ற இணையத்தளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி எஸ்டி பிரிவினருக்கும் பெண்களுக்கும் கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு ரூ.100 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here