spot_img
More
    முகப்புUncategorized"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல..!’’ முரசொலி

    “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல..!’’ முரசொலி

    “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல’ என்று முரசொலி எழுதியுள்ளது தலையங்கம்.

    தமிழ்­நாடு, கேரளா, பஞ்­சாப் ஆகிய மாநில அர­சு­க­ளின் சார்­பில் அந்­தந்த மாநில ஆளு­நர்­க­ளின் செயல்­பா­டு­க­ளுக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்பட்­டுள்­ளது. ‘மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள் அல்ல நீங்­கள் என்­பதை உண­ருங்­கள்’ என்று ஆளு­நர்­­களுக்கு அறி­வு­றுத்தி இருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம். இதை விட நெத்­தி­யடி இருக்க முடி­யாது. ‘ரொம்ப ஆடா­தீர்­கள், அடங்­குங்­கள்’ என்­ப­து­தான் இதன் உள்­ள­டக்­கம் ஆகும்.

    பார­திய ஜனதா கட்சி, எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளுக்கு ஆளு­நர்­கள் மூல­மாக குடைச்­சல் கொடுத்து வரு­கி­றது. எந்­தத் தகு­தி­யும் இல்­லா­த­வர்­கள் ஆளு­நர்­க­ளாக வரு­வ­தால், அவர்­கள் எஜ­மா­னர்­க­ளின் உத்­த­ர­வுக்கு கட்­டுப்­பட்­டுச் செயல்­ப­டு­கி­றார்­கள். தங்­க­ளுக்கு ஏதோ தகு­தி­கள் வந்து விட்­ட­தைப் போல நினைத்து ஆட்­டங்­கள் போடு­கி­றார்­கள். ஒரு மாநி­லத்­துக்கு ஆளு­ந­ராக வந்­து­விட்­ட­தா­லேயே, அந்த மாநி­லமே தங்­க­ளுக்­குச் சொந்­தம் என நினைத்­துக் கொள்­கி­றார்­கள். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்பட்ட ஒரு அரசு இருக்­கி­றது என்­ப­தையே மறந்­து­விட்டு, தாங்­கள் ஏதோ மக்­கள் தலை­வர்­க­ளைப் போல நடந்து கொள்­கி­றார்­கள்.

    அது­வும் தமிழ்­நாடு ஆளு­ந­ரின் செயல்­பா­டு­கள் என்­பவை அத்­து­மீ­றி­ய­தாக மட்­டு­மல்ல, அரு­வெ­றுப்­பா­ன­வை­யா­க­வும் இருக்­கின்றன. மாநி­லத்­தின் நன்­மைக்­கா­கத் துரும்­பைக் கூட நகர்த்­தாத அவர், தமிழ்­நாட்­டுக்­கான கெடு­தல்­களை வரி­சை­யா­கச் செய்து வரு­கி­றார். தமிழ், தமி­ழர், தமிழ்­நாட்­டின் பெரு­மை­க­ளைச் சிதைப்­பது ஒன்­றையே தனது நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளார். எதை­யா­வது சொல்லி, மாநி­லத்­தில் குழப்­பம் ஏற்­ப­டுத்­து­வதே அவ­ரது வேலை­யாக இருக்­கி­றது. பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­ ம­லைக்­கும் அவ­ருக்­கும் தான் இப்­போது போட்டி என்று சொல்­லத்­தக்க வகை­யில் ஆளு­நர் செயல்­பட்டு வரு­கி­றார். அதே­நே­ரத்­தில், மாநில நிர்­வா­கம் அனுப்­பும் கோப்­பு­களை தாம­தப்­ப­டுத்­தி­யும், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்றி அனுப்­பும் சட்­டங்­க­ளுக்கு அனு­மதி தரா­ம­லும் தனது அர­சி­யல் சட்­டக் கட­மை­க­ளைக் கூடச் செய்­யா­மல் சதி செய்­கி­றார்.

    எத்­த­னையோ முறை, எவ்­வ­ளவோ வகை உணர்த்­திய பிற­கும் ஆளு­நர் ரவி, உணர்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. திருந்­து­வ­தற்­கான அறி­குறி இல்லை. இதன் இறு­திக் கட்­ட­மா­கத்­தான் அவர் மீது உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­தது தமிழ்­நாடு அரசு. இதே போலத் தான் கேர­ளா­வின் நிலை­மை­யும், பஞ்­சாப் மாநி­லத்­தின் நிலை­மை­யும்.

    பஞ்­சாப் மாநி­லத்­தில் ஆம் ஆத்மி கட்­சி­யின் ஆட்சி நடக்­கி­றது. மாண்­பு­மிகு பக­வந்த் மான், முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார். தமிழ்­நாட்­டில் ஆளு­ந­ராக இருந்த பன்­வா­ரி­லால் புரோ­கித் தான், இப்­போது பஞ்­சாப் மாநி­லத்­தில் ஆளு­ந­ராக இருக்­கி­றார். பஞ்­சாப் மாநில அரசு அனுப்பி வைக்­கும் சட்­ட­முன் வடி­வு­க­ளுக்கு அனு­மதி தரா­மல் நிறுத்தி வைத்­தார் ஆளு­நர் பன்­வா­ரி­லால். கடந்த அக்­டோ­பர் 20 ஆம் தேதி தாக்­கல் செய்ய வேண்­டிய மூன்று நிதி மசோ­தாக்­களை நிறுத்தி வைத்து விட்­டார் ஆளு­நர். சட்­ட­சபை கூடு­வ­தற்கு முந்­தைய நாள் அதா­வது அக்­டோ­பர் 19 ஆம் தேதி­யன்று, மாநில அர­சுக்கு ஆளு­நர் ஒரு கடி­தம் எழு­து­கி­றார். அந்த மசோ­தாக்­களை ஆய்வு செய்ய வேண்டி உள்­ளது என்று அதில் குறிப்­பிட்டு இருந்­தார் ஆளு­நர்.

    சட்­ட­ச­பை­யைக் கூட்­டக் கூடாது என்­றும் ஆளு­நர் தடை போட்­டார். அத­னால் சபை கூடிய சில மணி­நே­ரங்­க­ளி­லேயே ஒத்தி வைக்­கப்­பட்­டது. இப்­படி பல்­வேறு குழப்­பங்­கள் நடக்­கி­றது பஞ்­சாப் மாநி­லத்­தில். இத­னைத் தடுக்­கவே உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு போனது பஞ்­சாப் அரசு. “சட்­ட­ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்ட மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்க ஆளு­ந­ருக்கு உத்­த­ர­விட வேண்­டும்” என்று கோரி­யது பஞ்­சாப் அரசு. உடனே, ஆளு­நர் என்ன செய்­தார் தெரி­யுமா? நிறுத்தி வைக்­கப்­பட்ட மூன்று நிதி­ம­சோ­தாக் ­க­ளில் இரண்­டைக் கையெ­ழுத்­துப் போட்டு அனுப்பி விட்­டார்.

    இதையே உச்­ச­நீ­தி­மன்­றம் கேள்­வி­யா­கக் கேட்­டது. உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட், நீதி­ப­தி­கள் பர்­தி­வாலா, மனோஜ் மிஸ்ரா அமர்­வில் மாட்­டிக் கொண்­டார் பஞ்­சாப் ஆளு­நர். “சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கு­மாறு ஆளு­ந­ருக்கு உத்­த­ர­வி­டக் கோரி உச்­ச­நீ­தி­மன்­றத்தை அணுக வேண்­டிய கட்­டா­யத்­துக்கு மாநில அர­சு­கள் தள்­ளப்­பட்டு இருப்­பது கவலை அளிப்­ப­தாக உள்­ளது. இப்­பி­ரச்­சினை உச்­ச­நீதி மன்­றத்­துக்கு வந்த பிறகு தான் ஆளு­நர்­கள் செயல்­ப­டு­கி­றார்­கள். இதே போலத்­தான் முன்பு தெலுங்­கானா ஆளு­ந­ரும் நடந்து கொண்­டார். மாநில அரசு அனுப்­பும் மசோ­தாக்­களை ஆய்வு செய்­ய­லாம். ஆனால் வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு வரு­வ­தற்கு முன்­பாக ஒப்­பு­தல் தர வேண்­டும்” என்று சொன்ன நீதி­ப­தி­கள்…

    “தாங்­கள் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் அல்ல என்­பதை ஆளு­நர்­கள் மறந்­து­வி­டக் கூடாது” என்று எச்­ச­ரிக்­கை­யா­க­வும் கிண்­ட­லா­க­வும் சொல்லி இருக்­கி­றார்­கள். மாநில ஆளு­நர்­க­ளுக்கு முத­லில் அறி­வு­றுத்த வேண்­டி­யது இது­தான். இது ஒரு நிய­ம­னப் பதவி. தங்­களை அண்டி இருப்­ப­வர்­களை திருப்­திப்­ப­டுத்து வதற்­கா­கத் தரப்­ப­டும் டம்மி பதவி. ‘இது ஒரு வேஸ்ட்­டான பதவி’ என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஒரு முறை சொன்­னார்­கள். அது­தான் உண்மை. ‘நீயே அயிரை மீன், உனக்கு ஏன் விலாங்­குச் சேட்டை?’ என்று ஒரு முது­மொழி உண்டு. அதனை ஆளு­நர்­க­ளாக வரு­ப­வர்­கள் உணர்­வது இல்லை.

    தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்றி அனுப்பி வைப்­பட்ட 14 சட்­ட­முன் வடி­வு­க­ளுக்கு அனு­மதி தரா­மல் ஊர் சுற்­றிக் கொண்டு இருக்­கி­றார் ஆளு­நர் ரவி. இது­போல் 8 மசோ­தாக்­க­ளுக்கு அனு­மதி தரா­மல் கேரள ஆளு­நர் ஆரீப் முக­மது கான் அனு­மதி தர­வில்லை. வழக்கு போட்ட பிறகு பஞ்­சாப் ஆளு­நர் பன்­வா­ரி­லால் செயல்­ப­டத் தொடங்கி இருக்­கி­றார். இந்த வழக்­கு­கள் அனைத்­தும் மொத்­த­மாக வரும் 10 ஆம் தேதி விசா­ர­ணைக்கு வர இருக்­கின்­றன. இதன்­பி­ற­கா­வது தமிழ்­நாடு ஆளு­நர் திருந்­து­கி­றாரா எனப் பார்ப்­போம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments