அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகளில் மாணவர்களின் ’பாஸ்’ அடிப்படையில் வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்த தயாரிப்பு வேலைகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 6.5.2024 அன்று விண்ணப்ப பதிவுக்கான அறிவிப்பு வெளியனது. அன்றே விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஜுன் 6 ஆம் தேதி அன்று விண்ணப்ப பதிவு முடிவடைந்தது.
அசல்சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜுன் 12 ஆம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டது. அன்றே ரேண்டம் எண் என்கிற சமவாய்ப்பு எண் ஒதுக்கப்பட்டது. அந்த தகவல், இமெயில் மூலம் மாணவர்களின் மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஜுலை 10 ஆம் தேதி அன்று தர வரிசை பட்டியல் வெளியாகிறது. சேவை மையம் வாயிலாக 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை குறைகளை சரி செய்து கொள்ளலாம். இதையடுத்து கவுன்சலிங் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் என்று சமூக வலைத்தளங்களில் பட்டியல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அதுபற்றிய விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில், https://www.tneaonline.org/ இணையதளத்தில் கடந்த ஏப்ரல் / மே தேர்வு முடிவுகள் அடிப்படையில் கல்லூரிகளின் வரிசை பட்டியலை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுபாட்டாளர் பெயரில் வெளியாகி உள்ளது.

அதில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பொறியியல் கல்லுரிகள் விபரம் :
1. INDIAN INSTITUTE OF HANDLOOM TECHNOLOGY (TNEA
Code 2343) சேலம் மாவட்டம்
2. PSG INSTITUTE OF TECHNOLOGY AND APPLIED
RESEARCH (2377 ) கோயமுத்தூர்
3. CENTRAL ELECTROCHEMICAL RESEARCH
INSTITUTE (CSIR) KARAIKUDI (5012) சிவகங்கை
4. VELAMMAL INSTITUTE OF TECHNOLOGY (1237) திருவள்ளூர்
5. CENTRAL INSTITUTE OF PLASTICS ENGINEERING
AND TECHNOLOGY (1321) சென்னை
6. ARUNACHALA COLLEGE OF ENGINEERING FOR
WOMEN (4944) கன்னியாகுமரி
7. SARANATHAN COLLEGE OF ENGINEERING (3819) திருச்சிராப்பள்ளி
8. MEENAKSHI SUNDARARAJAN ENGINEERING
COLLEGE (1309) சென்னை
9. LOYOLA – ICAM COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY (1450) சென்னை
10. RAMCO INSTITUTE OF TECHNOLOGY (4678) விருதுநகர்
(ANNA UNIVERSITY, CHENNAI – 25 :: OFFICE OF THE CONTROLLER OF EXAMINATIONS | PERCENTAGE OF STUDENTS PASSED IN UNIVERSITY EXAMINATIONS
APRIL / MAY 2023 EXAMINATIONS | B.E./B.Tech. DEGREE PROGRAMMES [STUDENTS STUDYING IN ALL THE FOUR YEARS] NON-AUTONOMOUS AFFILIATED COLLEGES)
முழு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள், பாஸ் சதவிகிதம் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். April_May_2023_pass_percentage anna university இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

