தொழில்நுட்ப கல்வி இயக்குநர் இரா.லலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பலவகை (பாலிடெக்னிக்) தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(பாலிடெக்னிக் படிப்புகான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது)
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயச் சேர்க்கை (Direct Second Year Diploma Admission) : மேல் நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் பயின்றிருக்க வேண்டும். / Mathematics / Chemistry / Computer Science / Electronics / Information Technology / Biology / Informatics Practices / Biotechnology / Technical Vocational Subject / Agriculture / Engineering Graphics / Business Studies / Entrepreneurship (Any of the three)
அல்லது
10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 10th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology).
பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணமான ரூ.150-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பிற்கான இணைய தள வாயிலாக விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள்: 08.05.2023. விண்ணப்ப பதிவு இறுதி நாள்: 26.05.2023.
தேவையான சான்றிதழ்கள்:
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்மற்றும் விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து தகவல்கள், வழிகாட்டி, மற்றும் தொலைபேசி எண்களை மாணக்கர்கள் https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பாடங்கள் விபரம் https://www.tnpoly.in/public/docs/Colleges-and-Branches_1.pdf என்ற இணையத்தளத்தி காணலாம்.


