பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை, மாநில சட்டமன்ற பா.ஜ.க குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் மற்றும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்பாலகணபதி, கோட்ட அமைப்புச் செயலாளர்கள் கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகுமார், மாவட்ட பார்வையாளர் நீலமுரளியாதவ் ஆகியோர் ஒப்புதலோடு வெளியிடுகிறேன்.
ஓ.பி.சி அணி தலைவர் டி.நாமத்துரை, இராணுவபிரிவு தலைவர் ராஜன், மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் ஜெகதீஸ், அறிவுசார் பிரிவு தலைவர் ராஜகோபால், நெசவாளர் பிரிவு தலைவர் சதீஷ், மீனவ பிரிவு தலைவர் அன்பு, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் வேல்கண்ணன் ஆகியோர் திருநெல்வேலி தெற்கு மாவட்ட அணி பிரிவு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து என்றும் தாயகப் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அறிவித்துள்ளார்.
1991-ம் ஆண்டில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் செட்டிகுளம் பண்ணையூர் நாமத்துரை. இவரது தந்தை பெயர் தங்கவேல் நாடார். விவசாய குடும்பத்தை சேர்ந்த நாமத்துரை, வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் தெக்ஷணமாற நாடார் சங்கம் கல்லூரியில் பி.காம்., பட்டப்படிப்பை முடித்துள்ளார். விவசாயத்தை தாண்டி, சிறுவயதில் இருந்தே, பா.ஜ.க கொள்கைகள் மீது தீவிர பிடிப்பு கொண்டவர். ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி என்று இயங்கியவர், பா.ஜ.க கிளை தலைவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர், வள்ளியூர் ஒன்றிய பார்வையாளர், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ஓ.பி.சி அணி துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இப்போது, நெல்லை தெற்கு மாவட்ட ஒ.பி.சி அணி தலைவராகி இருக்கிறார். இதையடுத்து, மாவட்ட தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் நாமத்துரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

