இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்று ஆன் லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி விட்டது. விண்ணப்ப பதிவுகள் செய்ய மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
MBBS – பொது மருத்துவம், BDS – பல் மருத்துவம், BAMS – ஆயூர்வேத மருத்துவம், BUMS – யுயுனானி மருத்துவம் , BSMS – சித்தா மருத்துவம், BHMS – ஹோமியோபதி மருத்துவம் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பு, இப்போது வெளியாகி விட்டது.
பொதுப் பிரிவினரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் தேர்வுக் கட்டணமாக 1700 ரூபாய் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் 1600 ரூபாய். ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் 1000 ரூபாய் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் https://exams.nta.ac.in/NEET என்ற இணையத்தளம் வாழியாக மட்டுமே பிப்ரவரி 9 ஆம் தேதியில் இருந்து மார்ச் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஜுன் 14 ஆம் தேதி நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
நீட் தேர்வு பாடத்திட்டம், வயது வரம்பு, தேர்வு முறைகள், நெகட்டிவ் மார்க்குள், விண்ணப்பத்தை பதிவு செய்வது, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் போன்றவை குறித்த முழுமையான அறிக்கையை முழுமையாக படிக்க இங்குள்ள லிங்கை கிளிக் செய்யவும் neet-ug-2024
மருத்துவ படிப்பில் சேர தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் உடனே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

