Home செய்திகள் ’’நாடு விட்டு வந்­த­வர்க்கு வீடு..!’’ முரசொலி

’’நாடு விட்டு வந்­த­வர்க்கு வீடு..!’’ முரசொலி

0
’’நாடு விட்டு வந்­த­வர்க்கு வீடு..!’’ முரசொலி

போர்ச் சூழல் கார­ண­மாக இலங்கை நாட்டை விட்டு வந்த ஈழத் தமி­ழர்க்கு வீடு­கள் வழங்கி அவர்­க­ளுக்கு பேரு­தவி செய்­தி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு பொறுப்­பேற்ற பிறகு தமிழ்­நாடு வாழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல; தமிழ்­நாட்­டுக்கு வாழ வந்த இலங்­கைத் தமி­ழர்க்­கும் ஏரா­ள­மான திட்­டங்­களை தீட்­டித் தரத் தொடங்­கி­னார் முத­ல­மைச்­சர் அவர்­கள். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி­யன்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் ஏரா­ள­மான திட்­டங்­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தார்­கள். இலங்­கை­யில் இருந்து வந்த தமி­ழர்­களை மன­தில் வைத்து அறி­விக்­கப்­பட்­டவை அவை. ரூ.318 கோடி மதிப்­பி­லான திட்­டப்­ப­ணி­கள் முகாம்­க­ளில் தங்கி இருக்­கும் ஈழத் தமிழ் மக்­க­ளுக்கு நிறை­வேற்­றப்­பட இருக்­கி­றது என்று அதில் குறிப்­பிட்­டார்.

13 உறுப்­பி­னர்­கள் கொண்ட ஆலோ­ச­னைக் குழுவை அமைத்­தார்­கள். 2021 ஆம் ஆண்டு நவம்­பர் 2 ஆம் நாள் வேலூர் முகா­முக்கு முத­ல­மைச்­சரே நேரில் சென்று பார்­வை­யிட்­டார்­கள்.

முகாம்­வாழ் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் மாதாந்­திர பணக்­கொடை, துணி­ம­ணி­கள், பாத்­தி­ரங்­கள், கல்வி உத­வித் தொகை ஆகிய நலத்­திட்­டங்­களை உயர்த்­தப்­பட்ட விகி­தத்­தில் வழங்­கப்­ப­டும் என அறி­வித்­த­து­டன், இல­வச சமை­யல் எரி­வாயு இணைப்பு, அடுப்பு மற்­றும் சமை­யல் எரி­வாயு மானி­யம், மக­ளிர் சுய உதவி குழுக்­க­ளுக்கு சமு­தாய முத­லீட்டு நிதி, இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­டன் கூடிய திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்­கப்­ப­டும் என­வும் அறி­வித்­தார். இத்­திட்­டங்­கள் அனைத்­தும் சீரிய முறை­யில் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இதில் மிக முக்­கி­ய­மா­னது அவர்­க­ளுக்­காக ரூ.231 கோடி செல­வில் புதி­தாக வீடு­கள் கட்­டித்­த­ரப்­பட உள்­ளன என்­ப­து­தான். “அவர்­கள் அக­தி­கள் அல்ல, அநா­தை­கள் அல்ல, அவர்­க­ளுக்கு நாம் இருக்­கி­றோம். அக­தி­கள் முகாம் என்று இனி அவற்றை அழைக்க மாட்­டோம். இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகாம் என்றே அழைப்­போம்” என்­றும் அப்­போது குறிப்­பிட்­டார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

1983 முதல் ஈழத்­தில் இருந்து தமிழ் மக்­கள் இங்கு வரு­வது தொடங்­கி­யது. இவர்­க­ளுக்­காக முகாம்­கள் அமைக்­கப்­பட்­டன. அ.தி.மு.க. ஆட்சி காலத்­தில் இம்­மு­காம்­கள் மிக­மிக மோச­மாக இருந்­தன. அதனை பரா­ம­ரிக்­க­வும் இல்லை. இந்த முகாம்­க­ளின் நிலைமை மிக மோச­மாக இருக்­கி­றது என்­பதை உணர்ந்த அன்­றைய முதல்­வர் கலை­ஞர் அவர்­கள் 1997 ஆம் ஆண்டு ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொடுத்­தார்­கள். அதன்­பி­றகு 2011 முதல் 2021 வரை மீண்­டும் அ.தி.மு.க. ஆட்­சி­யில் அவர்­கள் நிலைமை மிக மோசம் அடைந்­தது. இந்த நிலை­யில் மீண்­டும் இலங்­கைத் தமி­ழர் நல்­வாழ்­வுத் திட்­டங்­களை மீண்­டும் தொடங்­கி­னார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.

இதன்­படி இலங்­கைத் தமி­ழர்­கள் வசிக்­கும் முகாம்­க­ளில் புதிய குடி­யி­ருப்­பு­கள் கட்­டு­வ­தற்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்­டார்­கள்.

கடந்த 17 ஆம் தேதி மிக­மிக முக்­கி­ய­மான நாள். தந்தை பெரி­யார் பிறந்­த­நாள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உத­ய­மான நாள். அன்­றைய தினம் 13 மாவட்­டங்­க­ளில் உள்ள 19 இலங்கை தமி­ழர் மறு­வாழ்வு முகாம்­க­ளில் 79 கோடியே 70 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 1591 வீடு­களை திறந்து வைத்­தார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

இலங்­கைத் தமி­ழர்­க­ளது முகாம்­க­ளில் மிக­வும் பழு­த­டைந்த நிலை­யில் உள்ள 7,469 வீடு­கள் புதி­தாக கட்­டித்­த­ரப்­ப­டும் என முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருந்­தார். அவற்­றில் முதற்­கட்­ட­மாக, 3510 வீடு­கள் புதி­தாக கட்­டித்­த­ரப்­ப­டும் என­வும் அறி­விக்­கப்­பட்டு, அதற்­காக ரூ.176.02 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் இப்­போது 1591 வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளன. முதல் கட்­ட­மாக கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை இலங்­கைத் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கி­னார் முத­ல­மைச்­சர். அந்த வீடு­க­ளுக்கு தங்­க­ளது பிள்­ளை­க­ளோடு மிக­மிக கம்­பீ­ர­மாக அவர்­கள் நுழைந்­தார்­கள். இதற்கு முன்பு இருந்­தவை முகாம் வீடு­க­ளைப் போல இருக்­கும். இப்­போது வழங்­கப்­பட்­டவை குடி­யி­ருப்­பு­கள். மிக அழ­கான குடி­யி­ருப்­பு­கள். அத்­து­டன் வீட்­டுப் பயன்­பாட்டு பொருள்­க­ளை­யும் மரக்­கன்­று­க­ளை­யும் வழங்­கி­னார் முத­ல­மைச்­சர்.

மேல்­மொ­ண­வூர் இலங்­கைத் தமி­ழர் மறு­வாழ்வு முகா­மில் கட்­டப்­பட்ட வீடு­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று முத­ல­மைச்­சர் பார்­வை­யிட்­டார்­கள். “வீடு­களை நாங்­கள் கட்­டித் தந்­து­விட்­டோம், நீங்­கள் தான் பரா­ம­ரித்­துக் கொள்ள வேண்­டும்’’ என்று அன்­போடு முத­ல­மைச்­சர் கேட்­டுக் கொள்ள, அம்­மக்­கள் அன்­பு­டன் ஏற்­றுக் கொண்­டார்­கள். இந்த முகாம்­க­ளில் அடிப்­படை வச­தி­கள் அனைத்­தும் சீர் செய்து தரப்­பட்­டுள்­ளது.

நாடு விட்டு வந்த மக்­க­ளுக்கு வீடு­களை வழங்கி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர். இது­தான் எல்­லா­ரது ஏக்­கங்­க­ளை­யும் போக்­கும் அர­சா­கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here