Home ஆன்மிகம் தூத்துக்குடிசிவன் கோவிலில் சித்திரைதிருவிழா

தூத்துக்குடிசிவன் கோவிலில் சித்திரைதிருவிழா

0
தூத்துக்குடிசிவன் கோவிலில் சித்திரைதிருவிழா

தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரைத்திருவிழா நாளைமறுநாள்(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர், செயல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சித்திரை திருவிழா

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நாளைமறுநாள்(திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 3.5.23 வரை தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடக்கிறது. ஏழாம் திருநாளான 30-ந் தேதி சுவாமி- அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 8-ம் திருநாளன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. முதலில் கணபதி, முருகப்பெருமானும் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சுவாமி சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்பாளுடன் பெரிய தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தேரோட்டத்தின் போது புதுச்சேரி, விருதாச்சலம், கரூர் சிவ தொண்டர்களின் சிவ கைலாய சிவ பூதன வாத்தியங்கள், தேவார இன்னிசை வேத பாராயணம் நடக்கிறது. யானை, ஆடும் குதிரை, மகளிர் கோலாட்டம், களியல் ஆட்டம், மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் அணி வகுப்புகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள் நடக்கிறது. இந்த தேரோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here