’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து. எனவே, நிலவேம்பு குடிநீரைக் குடித்து டெங்கு காய்சலை விரட்டலாம்’’ என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மருத்துவர் கு.சிவராமன் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் நோய், பிற புளூ காய்ச்சல்கள் போல உடலுக்குள் வந்து சில தினங்கள் இருந்து விட்டு செல்லக் கூடியதுதான். ஆனால், ரத்த தட்டுக்களையும், வெள்ளை அணுக்களையும் வேகமாக குறைத்து மரணத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஆபத்து இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.
சுருக்கி பயன்படுத்த வேண்டும்.
நிலவேம்பு குடிநீரில் நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனத்தூள், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் சேர்ந்துள்ளன. இந்தக் காய்ச்சல் வந்த அனைவரும் நிலவேம்பு குடிநீர் பருகலாம். பெரியவர்கள் காலை, மாலை இரு வேளையும் உணவுக்கு முன்னர் 50 மிலி வரை எடுத்துக் கொள்ளலாம். 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து 15 முதல் 30 மிலி வரை கொடுக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட நிலவேம்பு பொடியை வாங்கி அதில் 5 கிராம் பொடியை 200 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மிலி சுருக்கி பயன்படுத்த வேண்டும்.
நிலவேம்பு குடிநீர் பருகினால் 3 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும். அதன்பிறகு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றினால் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் ரத்த தட்டுக்கள் குறைந்திருப்பது தெரிய வந்தால் ஆடாதொடை இலைச் சாறு அல்லது பப்பாளி இலைச் சாறு 10 முதல் 30 மிலி வரை 3 நாட்களுக்கு பருகலாம். இவை இரண்டும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை 2 நாள்களில் இரு மடங்காக அதிகரிக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. இதுவும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
தவிர்க்க வேண்டிய உணவுகள்!
உடலில் வேறு குறைபாடுகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே நிலவேம்பு குடிநீர் பருக வேண்டும். 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனை கொடுக்கக் கூடாது. டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள் இனிப்புகளை குறைத்து கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். காரம் தேவைப்படின் மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்கவும்.
காய்ச்சல் வருவதற்கு மிக முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைவது. எனவே, தினமும் இரண்டரை முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் ஆகியவற்றையும் குடிக்கலாம். காய்ச்சல் வந்தவர்களுக்கு அரிசி மற்றும் தானிய கஞ்சி, கீரை சூப் கொடுக்கலாம், மீன் தவிர மற்ற அசைவ உணவுகள், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
இம்காப்ஸ்: சென்னை திருவான்மியூரில் இம்காப்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் கிடைக்கும். இவர்களின், மொத்த விற்பனை நிலையம் உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் மருந்துகளை ஆர்டர் செய்யலாம். உங்கள் வீடுகளுக்கே நேரில் டெலிவரி செய்யும் வசதி அவர்களிடம் உள்ளது. மருந்துகள் ஆர்டர் செய்வது தொடர்பாக +91- 24521029, 24520189, 24520244, 9710105678 / 9710205678, (044) 24523313 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். https://impcops.org.in/ என்ற தளத்தை பாருங்கள். ரூ.1000-க்கு மேல் வாங்கினால் இலவச டெலிவரி உண்டு.

