- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர” உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில்,” நாடு போற்றும் ‘முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் – வரும் கல்வி ஆண்டில் அதனை அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் விரிவுபடுத்துவதற்கான பணிகளை தீர்மானிக்கவும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் & அரசு அதிகாரிகளுடன் பங்கேற்றோம். தனது மனதிற்கு நெருக்கமான இத்திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

