Home கல்வி கல்லூரிகள் கலை, அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்..!” 20.05.2024 இறுதி நாள்

கலை, அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்..!” 20.05.2024 இறுதி நாள்

0
கலை, அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்..!” 20.05.2024 இறுதி நாள்

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 2024-2025 கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, https://www.tngasa.in/ ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 20.05.2024 இறுதி நாள் ஆகும்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இன்று (06.05.2024)  முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 20.05.2024 இறுதி நாள் ஆகும்.

மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப விபரங்களை பதிவு செய்யலாம். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர், பதிவு கட்டணம் மட்டும், 2 ரூபாய் செலுத்த வேண்டும். மற்றவர்கள் பதிவு கட்டணம், 2 ரூபாயுடன், விண்ணப்ப கட்டணமாக, 48 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் வழியில் செலுத்தலாம். ஆன்லைன் வழியில் செலுத்த முடியாதவர்கள், கல்லுாரிகளின் சேர்க்கை உதவி மையங்களுக்கு வங்கி வரைவோலை எடுத்து சென்று செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணை விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு, 044 – 2432 3106, 2434 2911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விபரம்..! விண்ணப்ப பதிவு லிங்..!

https://www.tngasa.in/

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2024 (TNGASA 2024) என்பது பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்லைன் செயல்முறையாகும். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இது ஒரு ஒருங்கிணைந்த இணைய முகப்பு ஆகும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் SC/SCA/ST பிரிவினருக்கு ரூ 2/- மற்றப் பிரிவினருக்கு ரூ 50/- ஆகும்.

கல்லூரிகள் விபரம்  tngasa_booklet college list english 2024-2025  

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here