“கர்நாடக தேர்தல்; படுதோல்வி அடைந்த 14 பா.ஜ.க அமைச்சர்கள்..!” முதலமைச்சர் ரேஸில் சிவக்குமார், சித்தராமையா

"கர்நாடக தேர்தலில் படுதோல்வி அடைந்த 14 பா.ஜ.க அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி விட்டது. காங்கிரஸ் முதலமைச்சர் ரேஸில் சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் உள்ளனர்.

0
53

கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க கட்சி 65 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி சாதனை படைத்துள்ளது. 1989-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் வெற்றி பெற்றது.

அதேநேரம், இப்போது பா.ஜ.க கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. பா.ஜ.க கட்சியின் 14 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1. முத்தோள் தொகுதியில் போட்டியிட்ட பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோள் தோல்வி!

2. சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தோல்வி.

3. பெல்லாரி ஊரகம் தொகுதியில் போட்டியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.ஸ்ரீ.ராமுலு தோல்வி

4. பீளகி தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி தோல்வி.

5 வருணா தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா தோல்வி!

6. சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தோல்வி!

7. எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தோல்வி!

8. ஒசகோட்டை தொகுதியில் போட்டியிட்ட சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தோல்வி!

9. கிருஷ்ணராஜ் பேட் தொகுதியில் போட்டியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தோல்வி!

10. ஹிரேகேரு தொகுதியில் போட்டியிட்ட விவசாயத் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி!

11. சிக்கநாயகனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மாதுசாமி தோல்வி!

12. சிர்சி தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரிதோல்வி!

13. திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தோல்வி!

14. நாவல்குண்ட் தொகுதியில் போட்டியிட்ட துணி நூல் துறை அமைச்சர் சங்கர் மூனனேகு தோல்வி.

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் ரேஸ் கடுமையாக உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்