தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு.
கர்நாடகத்துக்கு வணக்கம்!
பாட்னாவுக்குப் பின், மதச்சார்பற்ற – ஜனநாயக சக்திகளான நாங்கள் அழகிய பெங்களூரு மாநகரில் ஜனநாயகம் காக்க ஒன்றிணைந்துள்ளோம்.
முக்கியமான இக்காலகட்டத்தில், பா.ஜ.க.வின் ஜனநாயகத்துக்குப் புறம்பான உத்திகளுக்கு எதிராக நாம் ஒரே அணியாக நிற்க வேண்டியது அவசியம்.

அண்மையில் நடந்த கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிற்போக்கு அரசியலை நிராகரித்து மக்கள் மிகவும் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டை முன்வைத்துள்ளனர். இதனை இந்திய அளவிலும் செய்துகாட்டுவோம்!
நாம் அனைவரும் இணைந்து நின்று, மக்களாட்சியைப் பாதுகாப்போம்! நம் பெருமைமிகு நாட்டின் ஒளிமிகு எதிர்காலத்தை உறுதிசெய்வோம்!

