இந்நிலையில், சென்னைக்கு வந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக உரையாடினர்.
இது தொடர்பாக வரு மற்றும் வெங்கடேஷ் இருவரும் அவர்களது த்விட்டேர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்
வானில் தினமும் இரவு ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்குமா என்று பேராசைப்பட்டோம்.
.ஆமாம்!!! அது நடந்தது !!!
“ஒன் & ஓன்லி சூப்பர் ஸ்டார்” உடன் “!!!
அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன். லவ் யூ தலைவா.
வருண் சக்கரவர்த்தி
15 மே, 2023 – என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது
சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த @rajinikanth ஐ சந்தித்தேன். என்ன ஒரு மென்மையான அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்.
அடுத்த முறை அவரை மீண்டும் சந்திக்கும் வரை , நம்பிக்கையுடன்
வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் அவரது பக்கத்தில் பெரும்பாலான ரஜினிகாந்த் செய்திகளை பகிர்ந்துள்ளார்