Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வு – 1,525 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு..!’’

’’ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வு – 1,525 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு..!’’

0
’’ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வு – 1,525 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு..!’’

இந்திய குடிமைப் பணிகள் (IAS, IFS, IPS உள்ளிட்ட) UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,525 பேர், இந்த தேர்வு மூலம் உதவித்தொகை கிடைக்க தேர்வு செய்யப்படுவார்கள். 

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன், திட்ட இயக்குநர் (போட்டி தேர்வுகள்) வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து தரும் வகையில் ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்!

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (சென்னை ஆர்.ஏ.புரம், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ம் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம்) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

www.naanmudhalvan.tn.gov.in – முழுவிபரம்..!

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 02.08.2023 அன்று முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2023 ஆகும்.

முக்கிய நாட்கள்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி – 02.08.2023

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – 02.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி –  17.08.2023

நுழைவுச் சீட்டு வெளியீடு –  30.08.2023

தேர்வு நாள்  – 10.09.2023 (10.00 am – 1.00 pm)

கல்வித் தகுதி:

குறைந்தபட்ச கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதெனும் ஒரு இளநிதல பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி (01.08.2024 அன்று):
புதியவர்களுக்கு (50 இடங்கள்):
குதறந்தபட்சம் – 21 ஆண்டுகள்
அதிகபட்சம் – 22 ஆண்டுகள் *

*(மருத்துவம், ஒருங்கிந்த பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவம்
போன்றவற்றில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின்
போது உரிய சான்றுகதளச் சமர்ப்பித்தால் வயது தளர்வு வழங்கப்படும். வயது
தளர்வு தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு திறன்
மேம்பாட்டு கழகத்திற்கு (TNSDC) உண்டு.)

குறைந்தபட்ச வயது: 21

அதிகபட்ச வயது:

அ) ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ ஆதிதிராவிடர் (அருந்ததியர்) 37
வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
ஆ) மாற்றுத்திறனாளி மாணவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக
இருப்பினும் 42 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
இ) பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) /
மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதுக்கு
மிகாதவராக இருக்க வேண்டும்.
ஈ) பொதுப்பிரிவினர் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தேர்வுத் திட்டம்:
கொள்குறி வகை– 150 (100 பொது அறிவு + 50 CSAT)
* குறிப்பு :
1. தவறான பதில்களுக்கு எதிர் (மைனஸ்) மதிப்பெண்கள் இல்லை.
2. கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும்

பாடத்திட்டம்:

மேற்குறிப்பிடப்பட்ட தேர்வு மதிப்பெண், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் (AICSCC) விண்ணப்பதாரர்களையும் தேர்வு செய்யப் பயன்படுத்தப்படும். அதாவது, சென்னை ஆர்.ஏ.புரத்தில் இயங்கி வரும் மையத்தின் முழுநேரப் பயிற்சிக்கு 225 நபரும், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபரும், கோயம்புத்தூரில் முழு நேர பயிற்சிக்கு 100 நபரும், மதுரையில் முழு நேரப் பயிற்சிக்கு 100 நபரும் என மொத்தம் 525 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, மேற்குறிப்பிட்ட தேர்வு எழுதும் போட்டித்தேர்வாளர்கள், AICSCC மையத்தில் பயிற்சி பெற விரும்பினால் விண்ணப்பத்தில் பயிற்சி பெற விரும்பும் மையத்தினை குறிப்பிட வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு Phone: 9043710214 / 9043710211 Email: nmcegrievances@naanmudhalvan.in என்ற எண்ணிலும் இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here