Home ஆரோக்கியம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா.. ?

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா.. ?

0
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா.. ?

ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை கேட்டவுடன் மகிழ்ச்சியான தருணம் தான் நம் நினைவுக்கு வரும். ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு பிடிக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீமால் ஈர்க்கப்பட்டுள்ளனர். பல வகைகள், பல வடிவங்கள், பல நிறங்கள், பல சுவைகளில் ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது.

குழந்தைகளை ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடக்கூடாது சளி பிடித்து விடும், பற்கள் சொத்தை ஆகிவிடும் என பெற்றோர்கள் காலம் காலமாக கூறுவார்கள். ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் நன்மைகளும் உள்ளது அதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

கலோரி : உடல் எடை..!

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்துக்கு மாற்றாக உடல் எடையை குறைக்கவும் வைக்கிறது. குளிர்ச்சியான உணவு என்பதால் நம் உடலின் டெம்பரேச்சரை மாற்றி உடலில் உள்ள கலோரிகளை குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கும் மகிழ்ச்சி தான். ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது நம் உடலில் செரடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசனை என்ற ஹார்மோனையும் கட்டுப்படுத்தி மன அழுத்தத்தையும் குறைத்து மகிழ்ச்சியை நமக்கு உண்டாக்குகிறது.

உடலின் சக்தியை அதிகரிக்கும்:

ஐஸ்கிரீம், பால், சர்க்கரை, பழங்கள், கொட்டைகள், உலர் பழங்களால் ஆனது. இது நமக்கு சோர்வான நேரத்தில் எனர்ஜியையும் தரும். இதில் விட்டமின்கள், மினரல்கள் உள்ளதால் நம் உடலுக்கும் எனர்ஜியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.

இதயம் மற்றும் பற்களுக்கு நல்லது:
சாக்லேட் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இதயத்தில் பிரச்சனை இருந்தாலும் சரியாக வாய்ப்பு உண்டு மற்றும் ஐஸ்கிரீமில் கால்சியம் உள்ளதால் பற்கள் மற்றும் ஈறுகளை வலுவடைய செய்கிறது.

– தே. சுகன்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here