Home செய்திகள் ’’ஐபிஎல் கிரிக்கெட்; யார் யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை..?’’ விருதுகள் முழு பட்டியல்

’’ஐபிஎல் கிரிக்கெட்; யார் யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை..?’’ விருதுகள் முழு பட்டியல்

0
’’ஐபிஎல் கிரிக்கெட்; யார் யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை..?’’ விருதுகள் முழு பட்டியல்

16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது இந்த சீசன். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஐபிஎல் போட்டி 2008 முதல் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆண்டுகளில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 4.8 கோடியும் இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2.4 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

பரிசுத்தொகை மாறி மாறி இப்போது அதன் நிலையே வேறு. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகை 46.5 கோடி ஆகும். கடந்த ஆண்டும் இதே பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2023 கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு ரூ. 20 கோடி பரிசாகக் கிடைக்கும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணி ரூ. 13 கோடியைப் பெறும். மூன்றாமிடம் பிடித்த மும்பை அணி ரூ. 7 கோடியையும் நான்காமிடம் பிடித்த லக்னெள அணி ரூ. 6.5 கோடியையும் பரிசுத் தொகையாகப் பெறும்.

அதேபோல, அதிக ரன்கள் எடுத்த மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்குத் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்படுகிறது. எமெர்ஜிங் பிளேயர் விருது பெறும் வீரருக்கு ரூ. 20 லட்சமும் மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர் விருது பெறும் வீரர் ரூ. 12 லட்சத்தையும் பரிசுத்தொகையாகப் பெறுவார்கள்.

மேலும், இந்தப் பருவத்தில் பவர் பிளேயர் விருது பெறும் வீரருக்கு ரூ. 15 லட்சமும் சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் கேம் சேஞ்சர் விருதுகளைப் பெறும் வீரர்களுக்குத் தலா ரூ. 12 லட்சமும் பரிசுத் தொகையாகக் கிடைக்கும்.

விருதுகள் பட்டியல்:

எமெர்ஜிங் பிளேயர் – யஷஸ்வி ஜெயிஸ்வால் (ரன்கள் – 625 ஸ்டிரைக் ரேட் – 164)

எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர் – கிளென் மேக்ஸ்வெல் (ஸ்டிரைக் ரேட் – 183)

கேம் சேஞ்சர் விருது – ஷுப்மன் கில்

தொடர் நாயகன் – ஷுப்மன் கில்

அதிக பவுண்டரிகள் – ஷுப்மன் கில் (85 பவுண்டரிகள்)

நீண்ட தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர் – ஃபாஃப் டு ப்ளஸி (115 மீட்டர்)

சிறந்த கேட்ச் – ரஷித் கான்

ஃபேர்பிளே விருது – தில்லி கேபிடல்ஸ்

அதிக விக்கெட்டுகள் – முகமது ஷமி

அதிக ரன்கள் – ஷுப்மன் கில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here