2024- ம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஜூன் 12-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கூட்டத்தின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.
அந்த வகையில் பீகார் முதலமைசர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறுகிறது.
இதனிடையே, அடுத்த வாரம் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி அமெரிக்காவில் உள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படுள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் கட்சிகள் சார்பில் அந்தந்த கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து தொகுதிகளிலும் பொது வேட்பாளர் நிறுத்துவது, பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்கள் என்று பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க இருக்கிறார்கள்.

