Home செய்திகள் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை புத்தகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

“ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை புத்தகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

0
“ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை புத்தகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 07.05.2023 அன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு தொடஙகுகிறது  அதை முன்னிட்டு, 06.05.2023 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, கலைவாணர் அரங்கில் 06.05.2023 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில், “தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற ஈராண்டு சாதனை மலர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்புக் காணொலி ஆகியவற்றை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1 இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்கி மற்றும் “புதுமைப் பெண்”, “நான் முதல்வன்” திட்டங்களின் கீழ் ஆணைகள் வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here