Home கல்வி கல்லூரிகள் ’’ அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்பு சேர்க்கை ..!’’ ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்

’’ அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்பு சேர்க்கை ..!’’ ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்

0
’’ அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்பு சேர்க்கை ..!’’ ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் (Post Graduate Courses) மாணவ மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

மிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27/07/2024 முதல் பதிவு செய்யலாம்.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு – ரூ.58/- பதிவுக் கட்டணம் – ரூ.2/- மட்டும்
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் – ரூ.2/- மட்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard / NetBanking / UPI மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 27/07/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

தொடர்பு எண்: 044 – 24343106/24342911
கல்லூரிக் கல்வி இயக்குநர்

விண்ணப்பம் பதிவு தொடக்க நாள் 27.07.2024

விண்ணப்பம் பதிவு நிறைவு நாள் 07.08.2024

தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்புதல் 10.08.2024

சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் 14 வரை

பொதுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 19 முதல் 23 வரை

முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம் ஆகஸ்ட் 28

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விபரம் , படிப்புகள் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள தகவல் சிற்றேட்டை படிக்க வேண்டும். அதைப் படிக்க இங்கே TNGASA-PG-24-Booklet கிளிக் செய்ய வேண்டும். தகவல் சிற்றேட்டை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பம் போடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here