சேலம் மாநகரம் அம்மாப்பேட்டையில் ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் நிறுவனத்தில் ஆடி விற்பனை தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அழகாய்., பேரழகாய்., அழகு சேர்க்கும் பல வண்ணங்களால் ஆன, ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் கடையில் ஆடிக் கொள்முதல் உற்சாகமுடன் நடக்கிறது.
காற்றையும் வெளிச்சத்தையும் கொண்டு வரும் தூதுவனாகவும், ஜன்னல்களுக்கும் கதவுகளுக்குமான அழகிய ஆடையாகவும், வீட்டினுள் தூசிகள் சிறு பூச்சிகள் வராதுவாறு தடுக்கக்கூடிய பாதுகாவலனாகவும் ஈசன்இளங்கோ நிறுவனத்தின் திரைச்சீலைகள் (Curtains) இருக்கின்றது.

இதுகுறித்து, பெங்களூருவை சேர்ந்த லெட்சுமி, ‘’ எங்கள் ஊரில் இருப்பதை விட சேலத்தில் பல வண்ணங்களில் இந்த கடையில் திரைச்சீலைகள், ஜன்னல் சீலைகள் கிடைக்கிறது. விலையும் குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் தரமும் நன்றாக இருக்கிறது. வெரைட்டி அதிகம் இருக்கிறது. எனவே, கலர் கலராக பார்த்து பார்த்து எடுக்க முடிகிறது. என் மகனுக்கும் மகளுக்கும் பிடித்த திரைச்சீலைகள் இங்கு கிடைத்ததில் மகிழ்ச்சி’’ என்று சொன்னார்.
இக்கடையின் உரிமையாளர் ’ஈசன் இளங்கோ’ கூறுகையில், ‘’வாடிக்கையாளர்களின் மனம் விரும்பும் தனித்துவ தயாரிப்புகள் எங்களுடையது. ‘ஈசன் இளங்கோ நிறுவனத்தின்’ திரைச்சீலைகள் நேர்த்தியான வடிவமைப்பில் உயர்ந்த தரத்தில் இருக்கும். சரியான விலையில் பொருட்களைத் தருகிறோம். இல்லத்தின் தனித்துவ அழகை மேலும் மேன்மைப்படுத்திட ஈசன் திரைச்சீலைகள் பெஸ்ட் மேட்ச் ஆக இருக்கும். ஒரு முறை எங்கள் கடைக்கு வந்தவர்கள் திரும்பவும் வருவார்கள். இந்த கடையைப் பற்றி நண்பர்களிடம் சொல்வார்கள். அதுவே எங்கள் தரத்திற்கு சான்று’’ என்று தெரிவித்தார்.

ஈரோடு மாநகரை சேர்ந்த எஸ்.அன்பழகன், ‘’ராசிக்கு ஏற்ப எனக்கு பிடிச்ச கலர் திரைச்சீலைகள் இங்கு கிடைச்சது சார். இந்த திரைச்சீலைகள், நன்மை தரும் நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்க்குள் கொண்டு வரும் என்பது என் எதிர்பார்ப்பு. இயற்கையின் வண்ணங்களில் வண்ண உளவியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது போன்று ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் அழகாய் இருக்கிறது. எங்குமே கிடைக்காத கலர் எனக்கு இங்கு கிடைத்தது. மகிழ்ச்சியாக எடுத்தேன்’’ என்றார்.
’’ஈர்ப்பு தன்மை மிளிர்ந்திடும் அழகுடன், உங்கள் வீட்டு வரவேற்பு அறை மற்றும் விருந்தினர் அறைக்கு மிகவும் ஏற்ற பேரழகுடன், எளிமையான வெளிப்பாடோடு பார்ப்போரை அசத்தும் கொள்ளை அழகு என, உங்கள் வீட்டின் அனைத்து அறைகளின் அழகையும் அதிர்ஷ்டத்தையும் உறுதி செய்யும் ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் நிறுவனத்தில், இப்போது நடைபெறும் ஆடி மாத சிறப்பு விற்பனையில் பயனடைய உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்’’ என்று அந்நிறுவனத்தின் விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.

